தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகை வருகின்ற ஜனவரி மாதம் தமிழ் மாதங்களில் தை திங்கள் ஒன்றாம் நாள் கொண்டாடப்படும்.
இதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பான பொங்கல் பரிசு காத்திருக்கிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களோடு கரும்பு உள்ளிட்டவையும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது இதனுடன் ரொக்கப் பணமும் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு பதிவாளர்கள் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் மகளிர் சுய உதவித் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் பொது மக்களின் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசு பொருட்களோடு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது.
எனவே இது குறித்தான அறிவிப்பு விரைவில் முதலமைச்சரால் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். பொங்கல் பரிசு உண்டு ஆயிரம் ரூபாய்க்கு பதில் 2000 ரூபாய் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான முதலமைச்சரின் அறிக்கையை எதிர்பார்த்து பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Tags:
பொதுச் செய்திகள்