தமிழக வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளில், உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு: தமிழக வேளாண் துறையில், உதவி வேளாண் அதிகாரி பதவியில், 84 காலியிடங்கள்; தமிழக தோட்டக்கலை துறையில், உதவி தோட்டக்கலை அதிகாரி பதவியில், 179 காலியிடங்கள் என, மொத்தம், 263 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
துவக்க நிலையில், 20,600 ரூபாய் அடிப்படை சம்பளம்.இந்த நியமனத்துக்கான போட்டி தேர்வு, பிப்.,7ல் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அடுத்த மாதம், 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, காலியிடங்கள் போன்ற விபரங்களை, www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி., யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:
வேலைவாய்ப்பு