அரியலூா் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வரும் அரியலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளா் - கணினி இயக்குபவா் தற்காலிக பணியிடத்துக்கு தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதியமாக மாதம் ரூ.13,240 மட்டும் வழங்கப்படும். 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் அவசியம்.
விண்ணப்பத்தினை ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மாவட்ட இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.12.2023 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூா் - 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
Tags:
வேலைவாய்ப்பு