மத்திய அரசின் பிஎம் கிசான் (PM KISAN) சம்மான் நிதி யோஜனா என்பது நாட்டில் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு நிதி உதவி வழங்கவும் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டமாக இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் வழங்கப்படும் இந்த நிதியானது 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 சம தவணைளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணைக்கும் ரூ. 2 ஆயிரம் வீதம் இத்தொகை விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக மத்திய அரசு டெபாசிட் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 14 தவணைகளில் விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்ஸ்களுக்கு ரூ.2.62 லட்சம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தின் 15-ஆம் தவணை நிதியை வெளியிட்டார். தகுதியான விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் தலா ரூ.2 ஆயிரம் என சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) யோஜனா-வின் 1-6வது தவணை நிதி எப்போது வெளியிடப்படும் என்ற அடுத்த எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. PM-KISAN திட்டத்தின் 16-ஆம் தவணை நிதியானது அடுத்த ஆண்டு அதாவது 2024 பிப்ரவரி - மார்ச் மாதங்களுக்கு இடையே மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் தற்போது வரை இது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
விவசாய நிலத்தை தங்கள் பெயரில் வைத்திருக்கும் அனைத்து நில உரிமையாளர் குடும்பங்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். பிஎம் கிசான் திட்டத்தின் 16-ஆம் தவணைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள் இங்கே:
- pmkisan.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று அந்த பேஜில் கொடுக்கப்பட்டிருக்கும் Farmer's corner என்ற ஆப்ஷனுக்கு செல்லவும்.
- New Farmer Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் நம்பரை என்டர் செய்து பேஜில் காண்பிக்கப்படும் கேப்ட்சாவை ஃபில் செய்ய வேண்டும்.
- இப்போது கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை என்டர் செய்து 'Yes' என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு பிஎம் கிசான் அப்ளிகேஷன் ஃபார்ம் 2023-ல் கேட்கப்பட்டிருக்கும் தகவலைப் பூர்த்தி செய்து, அதை save செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.
இந்த திட்டத்தில் இணைய தகுதி பெற்ற விவசாயிகள் விண்ணப்பித்த பிறகு பின்வரும் படிநிலைகள் மூலம் ஸ்டேட்டஸை சரி பார்க்கலாம்:
- pmkisan.gov.in என்ற அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்
- வெப்சைட்டின் ஹோம்பேஜில் இருக்கும் Farmers Corner என்ற ஆப்ஷனுக்கு சென்று அதில் Beneficiary Status என்பதை செலக்ட் செய்யவும்.
- ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஆதார் நம்பர் அல்லது பேங்க் அக்கவுண்ட் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
- பிறகு Get Data என்பதை கிளிக் செய்யவும்.
- இதனை தொடர்ந்து தவணை தொகையின் ஸ்டேட்டஸ் டிஸ்ப்ளேவில் காட்டப்படும்.
Tags:
பொதுச் செய்திகள்