ஒரே ஒரு ஜூஸ் போதும்! ரத்தம் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பும் கிடைக்கும்! 2 ரெசிபி செய்யலாம்!

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

பேரிட்சை பழம் - 2

உலர் திராட்சை - 2

பீட்ரூட் சிறியது - 1

கேரட் சிறியது - 1

ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்

ஜூஸ்ஸில் இருந்து வரும் சக்கை

கோதுமை மாவு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

பேரிட்சை பழம் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைத்துவிடவேண்டும்.

பின்னர் கேரட், பீட்ரூட் இரண்டையும் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து போதியளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஜூஸ் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

(தண்ணீருக்கு பதில் பால் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்)

பின்னர், அதிலிருந்து வரும் சக்கையில் ஒரு கப் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

பின்னர் சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து, சப்பாத்திக்களாக தோசை தவாவில் சேர்த்து சுட்டு எடுக்க வேண்டும்.

இரண்டுமே நல்ல ப்ரேக் பாஸ்ட் காம்போ, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

ரத்தம் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது.

பீட்ரூட்டின் நன்மைகள்

உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

ஏராளமான வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன.

மறதியை குறைக்கும்.

பிறப்பு குறைபாடுகளின் ஆபத்து குறையும்.

எலும்புகளை வலுப்படுத்தும்

இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.

குடல் மற்றும் செரிமானத்துக்கு நல்லது.

சரும ஆரோக்கியத்துக்கு நல்லது.

கேரட்டின் நன்மைகள்

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி6, கே 1, பையோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது. புரோட்டின் சத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளை உறுதியாக்குவது போன்ற பல நன்மைகள் கிடைக்கச் செய்கிறது.
Previous Post Next Post