7 நாளில் உடல் எடையை குறைக்க உதவும். தொப்பையை காணாமல் போகச்செய்யும், வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் தேவையற்ற சதையை குறைக்க உதவும்.
நீங்கள் இதை செய்ய துவங்கும் முன் உங்கள் உடல் எடையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் இந்த டிப்ஸ் பின்பற்றிய பின்னர், 7 நாட்கள் கழித்து மீண்டும் உடல் எடையை பரிசோதித்து பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும்.
சியா விதைகளுக்கும், சப்ஜா விதைகளுக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் அதை நன்றாக கவனித்த வாங்கவேண்டும்.
அடர் கருப்பு நிறத்தில் இருப்பது சப்ஜா விதைகள். திருநீற்றுப்பச்சிலை என்ற செடியின் விதைகள் தான் அவை. நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. எள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
சியா விதைகள் கருப்பு, சாம்பல், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களுமு கலந்து காணப்படும். இதுவும் எள்ளு போல் இருக்கும். ஆனால் அதை விட சிறியதாக இருக்கும். சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்துதான் சாப்பிட வேண்டும்.
ஆனால் சியா விதைகளை வறுக்காமல் பொடி செய்தும் சாப்பிடலாம். தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். பொடி செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டீர்கள் என்றால், இதை தோசையில் பொடிபோல் தூவி சாப்பிடலாம் அல்லது சாலட்களில் தூவி சாப்பிடலாம். இரண்டும் உடல் எடையை குறைக்கும்.
சப்ஜா உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய. சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது. வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்கு உதவுவது. ரத்தத்தை சுத்திகரிப்பது. வேகமாக உடல் எடையை குறைக்காது.
சியா விதைகளில் அதிகப்படியான புரதச்சத்தும், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்களும் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. செரிமானத்தை அதிகரிக்கும். உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். மலச்சிக்கலை சரிசெய்து, குடலியக்கத்தை சீர்செய்யும்.
வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும். உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்கக்கூடியது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பயன்படுத்தும் முறை
மிதமான சூடுகொண்ட தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து கொள்ள வேண்டும். மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேனை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இந்த பானத்தில் எலுமிச்சை மற்றும் தேனின் சுவை மட்டுமே உணரமுடியும். ஆனால் சியா விதைகளின் சுவை பெரியளவில் தெரியாது.
காலையில் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்துவிட்டு, இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது. இதை குடித்துவிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். பின்னர் காபி, டீ எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை பருகி ஒரு மணி நேரத்துக்குள் கூடுதலாக ஒரு முக்கால் லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உடல் நன்றாக வியர்க்க துவங்கிவிடும். உடற்பயிற்சி, டயட் போன்ற எதுவும் செய்ய தேவையில்லை. மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்துவிடும். ஒரு வாரம் கழித்து எடையை சரிசெய்யலாம். இதுவே உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், உடலுக்கு பயிற்சி என்பது மிகவும் அவசியம். அதையும் செய்ய வேண்டும்.
Tags:
உடல் நலம்