முக்கியத்துவம்பேஷன் கல்வியை வழங்குவதன் வாயிலாக, ஜவுளி மற்றும் ஆடை துறையில் திறமையான மனிதவளத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 1986ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், 2006ல் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது.
கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் வடிவமைப்பில், வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.
கல்வி வளாகங்கள்: பெங்களூரு, போபால், சென்னை, டாமன், காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடில்லி, பாட்னா, பஞ்ச்குலா, ரேபரேலி, ஷில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புபனேஷ்வர், ஸ்ரீநகர் ஆகிய 18 நகரங்களில் இக்கல்வி நிறுவன வளாகங்கள் செயல்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்புகள் - 4 ஆண்டுகள்:
பி.டெஸ்., - பேஷன் கம்யூனிகேஷன்
பி.டெஸ்., - ஆக்ஸசரி டிசைன்
பி.டெஸ்., - பேஷன் டிசைன்
பி.டெஸ்., - லெதர் டிசைன்
பி.எப்.டி., - அப்பேரல் புரொடக்சன்
பி.டெஸ்., - டெக்ஸ்டைல் டிசைன்
பி.டெக்., - பேஷன் டெக்னாலஜி
முதுநிலை பட்டப்படிப்புகள் - 2 ஆண்டுகள்:
எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன்
எம்.எப்.எம்., - மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட்
எம்.எப்.டெக்.,- மாஸ்டர் ஆப் பேஷன்
டெக்னாலஜிதேர்வு முறை:
தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வாயிலாக இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மற்றும் காகித அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுதும் 60 நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
https://exams.nta.ac.in/NIFT/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3
தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 5
விபரங்களுக்கு: https://nift.ac.in/ மற்றும் https://nta.ac.in/
Tags:
வேலைவாய்ப்பு