வயிற்று பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் ஒரே ஜூஸ்.?

கீரை உணவு வகைகளில் நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கக் கூடியது புதினா கீரை. புதினாவில் பல ஆரோக்கியமான நன்மைகள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

புதினாவை சட்னி, ஊறுகாய் அல்லது ஜூஸாக செய்து குடிக்கலாம். அவ்வாறு புதினாவை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.


குறிப்பாக புதினா ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

தினமும் காலையில் ஒரு கிளாஸ் புதினா சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் முகப்பரு வராமலும் தடுக்கிறது.


புதினா ஜூஸ் குடிப்பதால் செரிமான சக்தி அதிகரித்து ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கிறது.

அதேபோல் புதினா ஜூஸ் குடிப்பதால் ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக வாய் துர்நாற்றத்தை போக்கி பல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
Previous Post Next Post