நாம் அடிக்கடி சமையலுக்கு பயன்படுத்தி வரும் பொட்டுக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல சத்துக்களும் உடலில் பல நன்மைகளும் ஏற்பட்டு வருகின்றன.
நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த பொட்டுக்கடலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
நம் உடலுக்கு செரிமான சக்தியை அதிகப்படுத்தும் நார்ச்சத்து பொட்டுக்கடலையில் அதிகம் இருப்பதால், இதை தினமும் உண்ணும் போது வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது.
மேலும் மாதவிடாயில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொட்டுக்கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உண்டு வரலாம். உடலில் அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதில் பொட்டுக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.
Tags:
உடல் நலம்