ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த அக்டோபர் 16ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தேர்வு எழுத உள்ள மாணவர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் மேற்கண்ட தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வு 10ம் தேதிக்கு பதிலாக 17ம் தேதி நடக்கும். 10ம் தேதி தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய ஹால்டிக்கெட்டை 17ம் தேதிய தேர்வில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்