ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10.03.2020 க்கு முன்னதாக உயர் கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு நிதித்துறையின் ஒப்புதலைப் பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதி திராவிட நல இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள், 10.03.2020-க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத இடைநிலை/பட்டதாரி உடற்கல்வி கணினி பயிற்றுநர் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் (அரசின் முன் அனுமதியுடனும் / அனுமதியில்லாமலும்) உயர்கல்வி பயின்றவர்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் பெறும் கூடுதல் கல்வித் தகுதிக்கு வழங்கப்படும் ஒட்டு மொத்தத் தொகை (lumpsum amount) தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆணையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இரத்து செய்யப்படுகிறது . அரசு ஊழியர் பெறும் கூடுதல் கல்வி தகுதி தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி/உடற்கல்வி/கணினி பயிற்றுநர் முதுகலைப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். எனவே, தங்கள் மாவட்டத்திலுள்ள 10.03.2020-க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பரிசீலனை செய்து தங்களது பரிந்துரையுடன் முன்மொழிவுகளை இவ்வலுலகத்திற்கு அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்