அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..? தேர்வு விடுமுறையை குறைக்கத் திட்டம்..!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 11 ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.
மேலும் அரையாண்டு தேர்வு முடிந்து 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களுக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களுக்கும் தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது இதுகுறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு தேதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மிக்ஜாம் பபுயல் தாக்கத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் உரியத் தேதியில் தேர்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தேர்வு தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதி மாற்றத்தால் அரையாண்டு விடுமுறையிலும் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
பொதுச் செய்திகள்