ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மூன்றரை மாதங்களுக்கு மட்டும், தற்காலிக ஆசிரியர் உதவியாளர்கள் பணி நிரப்பப்பட உள்ளது.
கல்லுாரி முதல்வர் (பொ) சனில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, 2024-ம் கல்வி ஆண்டில், 17 ஆசிரியர் உதவியாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வக உதவியாளர்கள் ஜன.,1ம் தேதி முதல், மூன்றரை மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பணியமர்த்த, கல்லுாரி ஆட்சி மன்ற குழு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க முதுநிலை பயின்ற பட்டதாரிகள் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இக்கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியரும் இப்பதவிக்கு விண்ணப்பித்து வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டது.
Tags:
வேலைவாய்ப்பு