நமது நாட்டில் உள்ள மிக முக்கிய துறைகளில் ஒன்றான இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
தற்போது விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்குhttps://careerindianairforce.cdac.inஎன்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
அப்காட் (AFCAT Entry) நுழைவுத் தேர்வு மூலம் வெற்றி பெறுபவர்கள் விமானத்துறையின் பணியிடங்களில் அமர முடியும்.
விமானப்படையின் பொது நுழைவுத் தேர்வின் சுருக்கம்தான் அப்காட் (AFCAT Entry) ஆகும். தற்போது விமானத்துறையில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 317-ஆக உள்ளது.
பிளையிங் பிரிவில் (Flying) - 38 (ஆண்கள் - 28, பெண்கள் - 10), கிரவுண்ட் டூட்டி டெக்னிக்கல் பிரிவில் (Ground Duty (Technical) - 165 (ஆண்கள் - 149, பெண்கள் - 16) இடங்கள்,
கிரவுண்ட் டூட்டி-நான் டெக்னிக்கல் பிரிவில்
(Ground Duty (Non-Technical) - 114 (ஆண்கள் - 98, பெண்கள் - 16) இடங்கள் உள்ளன.
வயதுத் தகுதியாக பிளையிங் (Flying) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதியாக பிளையிங் (Flying) பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
கிரவுண்ட் டூட்டி டெக்னிக்கல் (Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்குhttps://careerindianairforce.cdac.in or https://afcat.cdac.inஎன்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30-ம் தேதி (30.12.2023) ஆகும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறியhttps://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT_01_2024/English_Notification_AFCAT_01-2024.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎன்ற இணையதளப் பக்கத்தினை தொடர்புகொள்ளலாம்.
Tags:
வேலைவாய்ப்பு