பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியதாக இருக்கும். சிறுவயதில் இருந்தே பிறருக்கு கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து பல பெற்றோர்கள் வளர்ப்பதுண்டு.
ஆயிரம் முறை ஊட்டிவிடும் அம்மாவுக்கு ஒருமுறை குழந்தை ஊட்டுகையில் ஒரு இன்பம் பிறக்கும். அதுபோல குழந்தைகள் பிறருக்காகக் கொடுக்கும்போது அதில் கள்ளம்கபடம் இல்லா அன்பு இருக்கும்.
அந்தவகையில் தன் மகன் அங்கித் டோர்னமென்ட்களில் விளையாடி வெற்றி பெற்று சேர்த்த பணத்தில் தனது வீட்டில் பணியுரியும் சமையல்கார பெண்ணுக்கு மொபைல் போனை பரிசாக வழங்கியது குறித்து வி.பாலாஜி என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
``அங்கித் இதுவரை வார இறுதிப் போட்டிகளில் விளையாடி 7,000 ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் வெற்றிபெற்ற பணத்தில் இருந்து 2,000 ரூபாய்க்கு எங்கள் சமையல்காரர் சரோஜாவுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அங்கித் 6 மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்தே இவர் கவனித்து வருகிறார். பெற்றோராக நானும் மீரா பாலாஜியும் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது'' என்று பதிவிட்டு, அங்கித் சரோஜாவுக்கு போன் கொடுக்கும் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறார்.
`இருப்பதைக் காட்டிலும் கொடுப்பதைப் பற்றி என் பெற்றோர் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். இந்த ட்வீட் என்னை நன்றியிலும் மகிழ்ச்சியிலும் நிரப்புகிறது' என்ற இந்த போஸ்ட்டுக்கு பலரும் பாராட்டி கமென்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Tags:
பொதுச் செய்திகள்