கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர அருகே கரையை கடந்தது.
இந்த புயலின் கோர தாண்டவத்தால் பெய்த கனமழையால் தலைநகர் சென்னை பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. இன்னும் மீட்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் அனைத்து இடங்களிலும் வெள்ளம் போல் மழை சூழுந்து இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மிக்ஜாம் புயலின் தாக்கம் இப்படி இருக்கும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி ஒரே நாளில் சென்னை மாநகரத்தை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத சூழலில் தற்பொழுது மீண்டும் ஒரு புயல் உருவாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த புயல் சென்னையை தாக்கும் என்று வரும் தகவலால் சென்னை வாசிகள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால் புதிதாக புயல் உருவாகப்போகிறது என்ற செய்தி முற்றிலும் வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறது.
வருகின்ற டிசம்பர் 10 அன்று புதிய புயல் உருவாகக் கூடும் என்று பரவும் செய்தி முற்றிலும் உண்மைத் தன்மை அற்றது. இது போன்ற தவற செய்தியை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் வருகின்ற 10 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
Tags:
பொதுச் செய்திகள்