Paytmy-ல் புதிய வசதி அறிமுகம்.. என்ன தெரியுமா?

அன்றாட ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை செயல்படுத்துவதற்கு QR ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுவது இந்தியா முழுவதும் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

பழக்கடை, மளிகை கடை, ரோட்டோர உணவு தள்ளுவண்டிகள் ஆகியவற்றில் தொடங்கி பெரிய பெரிய மால்கள் வரை எல்லா இடங்களிலும் தற்போது QR ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை தற்போது மொபைல் பேமெண்ட்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்களது கஸ்டமர்களுக்கு புதுவிதமான பேமெண்ட் தீர்வுகளை தருவதற்கு சிறு சிறு வியாபாரிகளுக்கு உதவும் பொருட்டு PayTm நிறுவனம் QR கோடுகள் மற்றும் சவுண்ட் பாக்ஸ்களை வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள கிரெடிட் கார்டு அமைப்பை வலுப்படுத்தவும், கஸ்டமர்களின் பேமெண்ட் அனுபவத்தை மேம்படுத்தவும் UPI சிஸ்டத்தில் கிரெடிட் கார்டு வசதியை சமீபத்தில் PayTm பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகப்படுத்தியது. UPI சிஸ்டத்துடன் கிரெடிட் கார்டுகளை இணைத்திருப்பது கார்டு ஹோல்டர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது.


வெறுமனே QR கோடை ஸ்கேன் செய்து, கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பேமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். இது அனைவரும் பின்பற்றக்கூடிய எளிதான ஒரு செயல்முறையாக அமைகிறது. பேமெண்ட் செய்வதற்கு முன் Paytm உடன் உங்களது கிரெடிட் கார்டை இணைப்பது அவசியம். உங்களது கிரெடிட் கார்டை Paytm-இல் எவ்வாறு இணைப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்:


'Paytm app' அப்ளிகேஷனை திறந்து ஹோம் பேஜில் உள்ள 'Link Rupay Card to UPI' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

உங்களது கார்டை இணைப்பதற்கு பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள வங்கியில் இருந்து உங்களது கிரெடிட் கார்டு வங்கியை தேர்வு செய்யவும்.

உங்களது கார்டிற்கு UPI PIN அமைத்து பேமெண்ட் செய்வதற்கு நீங்கள் துவங்கலாம்.

Paytm UPI மூலமாக உங்களது கிரெடிட் கார்டு பேமெண்ட்களை துவங்குவதற்கு பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:


1. கடையின் QR கோடை ஸ்கேன் செய்து, பேமெண்ட் தொகையை என்டர் செய்யவும்.

2. பேமெண்ட் பக்கத்தில் லிங்க் செய்யப்பட்ட கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்.

3. உங்களது UPI PIN நம்பரை என்டர் செய்து ட்ரான்ஸாக்ஷனை நிறைவு செய்யவும்.

இவ்வாறு உங்களது கிரெடிட் கார்டு மூலமாக UPI பேமெண்ட்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் நீங்கள் செய்து முடிக்கலாம்.

மேலும் Paytm அப்ளிகேஷனில் உங்களது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு வெப்சைட் அல்லது மொபைல் அப்ளிகேஷனில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:


செக் அவுட் பேஜில் UPI ID என்டர் செய்யுங்கள் அல்லது Paytm UPI பேமெண்ட் முறையை தேர்வு செய்யவும்.

Paytm app அப்ளிகேஷனை திறந்து பேமெண்ட் பக்கத்தில் உங்களது லிங்க் செய்யப்பட்ட கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்

UPI PIN நம்பரை என்டர் செய்து ட்ரான்ஷாக்ஷனை நிறைவு செய்யுங்கள்.

UPI பிளாட்ஃபார்முடன் RuPay கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 2022 முதல் அனுமதி வழங்கியுள்ளது. எனவே இது போன்ற பேமெண்ட்களை துவங்குவதற்கு யூசர்கள் முதலில் UPI உடன் RuPay கிரெடிட் கார்டை இணைக்க வேண்டும்.

தற்போது வரை, SBI வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி, AU சிறு நிதி வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, கனரா வங்கி, பெடரல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, CSB வங்கி போன்ற வங்கிகளில் RuPay வை இணைப்பதற்கான செயல்முறை ஏற்கனவே துவங்கி விட்டது.
Previous Post Next Post