2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.
இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023-ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ஆம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முன்னதாக, முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் 2022 மே மாதத்தில் எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
5,777 பணியிடங்களுக்கு சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும். முன்பை 248 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், குரூப்-1ஏ சேவைகளில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இந்த மாதத்துக்குள் வெளியிடப்படும்.
இதேபோல், 95 குரூப் 1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, 11 மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்துத் தேர்வு, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவன ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வக இளநிலை ஆய்வாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும்.
இந்நிலையில் குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து TNPSC அறிவித்துள்ளது. 5,413ஆக இருந்த குரூப்2 பணியிடங்களில் 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அறிவிக்கப்பட்டபடி ஜன. 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 15 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
வேலைவாய்ப்பு