இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது.
மக்கள் பல பேரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை எளிதான ஒன்றாக கருதுகின்றனர். இதன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடிகிறது.
இந்நிலையில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, ஃபோன் பே நிறுவனங்குள்கு NPCI அறிவுறுத்தியுள்ளது. மோசடிகைளை தடுக்க ரூ.2000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்