அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜிப்மர் மருத்துவமனை வரும் 22-ம் தேதி பிற்பகல் 2.30 வரை இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரியில் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜிப்மர் நிறுவனம் வரும் 22-ம் தேதி மதியம் 2.30 வரை இயங்காது. இந்நேரத்தில் வெளிப்புற சிகிச்சைப்பிரிவுக்கு நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும். சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் ஜனவரி 22 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
பொதுச் செய்திகள்