`500 ரூபாய் நோட்டில் ராமர் படம்'... ஜனவரி 22-ல் வெளியிடப்படுமா, உண்மை என்ன?

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் வரும் ஜனவரி 22 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒருபுறம் ராமர் கோவில் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மறுபுறம் இதுபோன்ற தவறான தகவல்களும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

சோஷியல் மீடியாவில், `இப்போது 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டைக்குப் பதிலாக ஸ்ரீராம் மந்திர் படம் இருக்கும். ஜெய் ஸ்ரீ ராம்'... `புதிய 500 ரூபாய் நோட்டு. காந்தி ஒழிந்தார், இதற்கு மேல் அவரை மகாத்மா என அழைக்கத் தேவையில்லை' எனப் பலர் குறிப்பிட்டு வருவதைக் காண முடிகிறது.

இது வெகுஜன மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து ஆராய்கையில், இந்த 500 ரூபாய் நோட்டு மார்பிங் செய்யப்பட்ட ஒன்று. மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளது குறித்து எந்தவித பத்திரிகை செய்திகளும், மத்திய அரசு தகவலும் இல்லை. ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும், இதுபோன்ற எந்த அறிவிப்பும் இல்லை.
500 ரூபாய் நோட்டு ``2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை, புழுக்கத்தில் இருக்கிறது" - மக்களின் அதிரடி பதில்!

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், தற்போதுள்ள மகாத்மா காந்தியின் உருவம் பதித்த 500 ரூபாய் நோட்டு காட்டப்படுகிறது. ஆக இந்த ராமர் படமுள்ள மார்பிங் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு குறித்த குழப்பம் தேவையில்லை. இந்த தகவல் தவறானது.

இருந்தபோதும் மக்களின் குழப்பத்தைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கமளித்து செய்தி வெளியிடுவது நல்லது.
Previous Post Next Post