தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுக்குறித்து வெளியான அறிக்கையில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதோடு, பள்ளிகளில் தூய்மை கடைபிடிப்பது, நெகிழி பயன்பாடு தவிர்த்தல் உள்ளிட்ட விழிப்புணர்வை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்