ஏன் தெரியுமா ? வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது..!


பழங்களை காலையில் தான் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது 2 மணி நேரத்துக்கு பின்பு சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதே மாதிரி பழங்களைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம். ஏன் ?

பழங்கள் ஆரோக்கியமான உணவு தானே என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுகிறோம். எந்த ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை நம்முடைய உடல் வாகு, எந்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம், எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் போன்றவற்றில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். அதிலும் பழங்கள் சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிப்பது மிக மிக மோசமான பழக்கம்.

பழங்களில் தாதுக்கள், விட்டமின்கள் சத்துக்கள் இருக்கிற மாதிரி பிரக்டோஸ் (சர்க்கரை) மற்றும் ஈஸ்ட் பொருட்கள் உள்ளன. எனவே நீங்கள் பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது அது வயிற்று அமிலங்களை நீர்த்துப் போக செய்து விடும். இதனால் குடலில் பாக்டீரியாக்கள் பெருகி கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆல்கஹாலை உற்பத்தி செய்யும். இதுவே வாயுத் தொல்லைக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

உடலில் உள்ள அமிலங்கள் தூண்டப்படுகிற பொழுது அதிலிருந்து உடலுக்குக் கேடு செய்யும் பாக்டீரியாக்களின் உற்பத்தியும் பெருக்கமும் அதிகமாகிவிடும். அது வயிற்றுத் தசைகளை இறுக்கிப் பிடிக்கவும் வயிற்று வலியையும் ஏற்படுத்தி விடும்

தண்ணீர் சத்துக்கள் நிறைந்த பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது வயிற்றின் அமில கார சமநிலையை பாதிக்கிறது. pH அளவு மாறுகிறது. அதிகப்படியான நீரால் வயிற்றின் அமிலத்தன்மை குறைகிறது பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நம் வயிற்றின் அமில நிலையை குறைத்து விடும். இதனால் வயிற்று அமிலம் குறைந்து சரியாக சீரணிப்பு நடக்காது. எனவே பழங்கள் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தண்ணீர் குடியுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் போது இரைப்பை ஜூஸ்கள் நீர்த்துப் போய் சீரண என்சைம்களை உருவாகுவது பாதிப்படைகிறது. இதனால் சீரண என்சைம்களின் வரவு குறைவால் நெஞ்செரிச்சல், அசிட்டிட்டி பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர்பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை குறைத்து உணவு சரியாக செரிமானம் ஆகாமல் செய்து விடுகிறது. இதனால் செரிமானம் ஆகாத உணவுகள் கொழுப்பாக மாற்றப்பட்டு இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு உயர ஆரம்பிக்கிறது. இது காலப்போக்கில் டயாபெட்டீஸ் நோய் வர காரணமாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தர்பூசணி பழங்களை சாப்பிட்ட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக செய்து அசெளகரியத்தை உண்டாக்கும். ஆயுர்வேத மருத்துவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது என்கிறார்கள். வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு சாதாரண நீரோ அல்லது குளிர்ந்த நீரோ எடுத்துக் கொண்டால் தீவிர சீரண பிரச்சினையை நீங்கள் சந்திக்க நேரிடும். இது அஜீரணத்தை உண்டாக்கும். எனவே இனி வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு 15 - 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடியுங்கள்.

வேர்க்கடலையில் அதிகளவு எண்ணெய் சத்து உள்ளது. எனவே நீங்கள் வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் குடலில் இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிய வாய்ப்புள்ளதாம். மேலும் இருமல், தொண்டையில் எரிச்சல் உண்டாகுமாம்.

ஆரஞ்சு, லெமன் போன்ற சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. எனவே இவற்றை உண்ட பிறகும் தண்ணீர் குடிப்பது வயிற்றின் pH அளவை பாதித்து சீரணமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே இனி பழங்களை எடுத்துக் கொண்டே உடனே தண்ணீர் குடிக்காமல் இருங்கள். நிறைய வயிற்று உபாதைகளை தடுக்கலாம்.
Previous Post Next Post