செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இத்தனை பலன்களா?

பெண் பிள்ளைகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சேமிப்பு திட்டமாக சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Yojana) அமைகிறது.

இந்த சேமிப்பு திட்டம் பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (Beti Bachao Beti Padhao) என்ற இந்திய அரசின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக திகழ்கிறது. இத்திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு ஆகும் செலவிற்கு உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு குறைவாக உள்ள ஒரு பெண் பிள்ளையின் பெயரில் அவரது பாதுகாவலர் யாரேனும் இந்த அக்கவுண்டை திறக்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் பலன்கள்:

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சமாக 1,50,000 ரூபாயும் டெபாசிட் செய்யலாம்.

இதில் அதிகப்படியான வட்டி வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் வருமான வரியை சேமிப்பதற்கான நன்மைகளும் மற்றும் லாக்கின் பீரியட் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகிறது.

SSY அம்சங்கள் & செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 2023:

இதில் ஒரு வருடத்திற்கான குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாய்; இதுவே அதிகபட்ச முதலீடு ஒரு வருடத்திற்கு 1,50,000 ரூபாயாக உள்ளது.

இத்திட்டம் 21 வருடங்கள் நிறைவடைந்த உடன் மெச்சூரிட்டி ஆகும். தற்போதைய நிலையில் SSY திட்டத்தில் ஏராளமான வரி சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது இருக்கக்கூடிய அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு அதிகப்படியான வட்டி அதாவது 8.0% (அக்டோபர் 01, 2023- டிசம்பர் 31, 2023) கொடுக்கப்படுகிறது

இந்த திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்த முதலீட்டு தொகை, மொத்தமாக உங்களுக்கு கிடைத்த வட்டி மற்றும் மெச்சூரிட்டி சலுகைகள் போன்றவை வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C -இன் கீழ் எக்ஸம்ப்ஷனாக கருதப்படும். உங்களது அக்கவுண்டை இந்தியா முழுவதும் உள்ள வேறொரு போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்படுகிறது. மெச்சூரிட்டிக்கு பிறகும் கூட நீங்கள் சேமிப்பு கணக்கை மூடாவிடில் உங்களுக்கு தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மெச்சூரிட்டி காலத்திற்கு முன்னரே பணத்தை வித்ட்ரா செய்ய நினைத்தால், அதற்கு நீங்கள் பிள்ளைக்கு 18 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் உங்கள் பெண் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் கூட நீங்கள் 50 சதவீத முதலீட்டை வித்ட்ரா செய்து கொள்ளலாம்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கக்கூடிய பெண் பிள்ளையின் உயர் கல்விக்கு உதவும் காரணத்திற்காகவே ப்ரீமெச்சூர் வித்ட்ராயல் அம்சம் வழங்கப்படுகிறது.

மேலும் பெண் பிள்ளை 18 வயதை அடைந்த பிறகு அவருக்கு நீங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தாலும் இந்த அக்கவுண்ட்டை முன்கூட்டியே மூடுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான தகுதி வரம்பு:

ஒரு பெண் பிள்ளையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் போன்ற நபர்கள் 10 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளின் பெயரில் இந்த அக்கவுண்டை திறக்கலாம். அக்கவுண்ட் திறக்கும் தேதி அன்று அந்த சிறுமி 10 வயதை அடைந்திருக்கக் கூடாது என்பதே இதற்கான நிபந்தனை.

ஒவ்வொரு அக்கவுண்ட் ஹோல்டரும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்திருக்க முடியும்.

ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கை திறக்கலாம். ட்வின்ஸ் அல்லது ட்ரிப்லெட்ஸ் பெண் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சரியான பிறப்பு சான்றிதழ்களை வழங்கினால் இரண்டுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை திறந்து கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான அக்கவுண்ட்டை யாரெல்லாம் திறக்கலாம்?

ஒரு பெண் குழந்தையின் சட்ட ரீதியான பாதுகாவலர் அல்லது பெற்றோர் அந்த பெண் பிள்ளைக்கு பதிலாக செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை திறக்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான அக்கவுண்ட்டை எங்கு திறக்கலாம்?

உங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை திறக்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ICICI வங்கி, HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற வங்கிகள் இதில் நடக்கும்.

இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் இந்த அக்கவுண்ட்டை திறக்க முடியுமா?

தற்போதைய சூழ்நிலையில் NRIகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பங்கு பெற முடியாது.
Previous Post Next Post