மூல நோய்க்கு பலன் தரும் மணத்தக்காளி கீரை...

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு வகையான மூலிகைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் தமிழகத்தைப் பொருத்தவரையிலும் உணவே மருந்து என்னும் பொன்மொழியை நம் முன்னோர்கள் வழங்கிச் சென்றுள்ளனர்.

எண்ணற்ற மூலிகைகளை நாம் மருந்தாகவும், உணவாகவும் உட்கொண்டு வருகிறோம்.

நெல்லிக்காய், பிரண்டை, கற்றாழை போன்றவை மருத்துவ குணம் மிகுந்தவை. அவற்றை நம் மக்கள் உணவிலும் நேரடியாக சேர்த்துக் கொள்கின்றனர். பல மூலிகைகளை நம் மக்கள் மெனக்கெட்டு வளர்ப்பதில்லை. அவை தாமாகவே படர்ந்து வளரக் கூடியவை. இதில் பிரண்டை, கற்றாழை போன்றவற்றை களைச் செடிகளோடு சேர்த்து நம் மக்கள் பிடுங்கி எறிவதும் உண்டு.

அற்புதமான கீரை

சந்தையில் நாம் இந்தக் கீரையை விரும்பி வாங்கிச் சாப்பிடுவோம். இதன் பழங்கள் ஊதா நிறத்தில் சின்னஞ்சிறியதாக இருக்கும். அதற்கும் கூட தக்காளி என்று பெயர். ஆம், இது என்ன கீரை என்று யூகம் செய்திருப்பீர்கள். குடல்புண் முதற்கொண்டு பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்ற மணத்தக்காளி கீரை குறித்துதான் நாம் இன்றைக்கு பார்க்க இருக்கிறோம்.

எங்கும் கிடைக்கும்..?

மணத்தக்காளி செடி பொதுவாக 1 முதல் 1.5 அடி உயரம் வரையில் வளரக் கூடியவை. இதன் விதைகள் காற்றில் பரவி வளரக் கூடியது என்பதால் நம்முடைய தோட்டப் பகுதியில் படர்ந்து கிடக்கும். இந்தக் கீரையின் மகத்துவம் குறித்து ஆயுர்வேத மருத்துவர் ஆகான்ஷா தீக்‌ஷித் கூறுகையில், "வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுக்கும் மருந்தாக விளங்குவது மணத்தக்காளி கீரையாகும்.

இதன் கீரை, பழம் மட்டுமல்லாமல், இதன் வேர்களைக் கூட நாம் மருந்தாகப் பயன்படுத்தலாம். வேர்களை காயவைத்து, பொடியாக நுணுக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் மற்றும் நாம் என்றென்றும் இளமையாக இருப்போம்.


மஞ்சள் காமாலை மற்றும் இதர நோய்களுக்குத் தீர்வு

காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கு மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். சிறுநீரக நோய்கள், உடலில் காணப்படும் வீக்கம், மூலநோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு இது தீர்வு தரும்.

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோல் தொடர்புடைய நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலை இளமையாக வைத்துக் கொள்ளவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

மணத்தக்காளி சூப் செய்வது எப்படி..?

ஒரு கப் நிறைய கீரையை கிள்ளி, அலசி எடுத்துக் கொள்ளவும். இரண்டு கப் நீரில் பாசிப்பருப்பு 100 கிராம் அளவு சேர்த்து கொதிக்க விடவும். அதை வேக வைக்கும் போதே, கைப்பிடி அளவு நறுக்கிய சின்னவெங்காயம், ஒரு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்க்கவும். எல்லாம் வெந்து முடிந்த பிறகு, தனி கடாயில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
Previous Post Next Post