தமனி அடைப்பைத் தடுத்து நரம்புகளில் அழுக்கு சேராமல் பாதுகாக்கும் உணவுகள்

பிஸியான வாழ்க்கை முறை, டென்ஷன், ஜங்க் ஃபுட், புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மை போன்றவை நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதயம் மிகவும் பாதிக்கப்படுவதற்கு இதுபோன்ற அனைத்துமே காரணங்கள் ஆகின்றன. நமது இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அதில் உணவுப் பழக்கம் முக்கிய இடம் பெறுகிறது.

தமனிகளில் அடைப்பு ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும் தமனி அடைப்பை, நமது உணவுப் பழக்கங்கள் மூலமே முறையாக்க முடியும். உண்மையில் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவது தீவிர நிலை என்பது குறிபிடத்தக்கது. உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

விதைகள் மற்றும் கொட்டைகள்

தினசரி உணவில் விதைகள் மற்றும் கொட்டைகள் சேர்த்துக்கொள்வதன் மூலம், இதயம் மற்றும் தமனிகள் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதற்கு பாதாம், வால்நட், அத்திப்பழம், திராட்சை, முந்திரி போன்றவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவற்றுடன், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் போன்றவற்றை உட்கொள்ளவும். இவை அனைத்திலும் அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவற்றை உட்கொள்வதால், கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளில் சேராது என்பதுடன், இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளை வழக்கமாக உட்கொள்வது தமனிகள் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஒரு ஆய்வின் படி, ஒரு நாளைக்கு நான்கு தேக்கரண்டி பச்சை காய்கறிகளுக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்காரணமாக இறப்பு ஆபத்து குறைவாக உள்ளது.

பச்சை காய்கறிகளை சாலட், சூப் மற்றும் உணவாக சமைத்து உட்கொள்ளலாம். பச்சைக் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், இவற்றில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்கள் தடிமனாவதைத் தடுக்கிறது, இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கீரையில் அதிக அளவு பொட்டாசியம், வைட்டமின் சி, நைட்ரேட்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் இதயம் மற்றும் தமனிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், குறைந்த அளவில் மட்டும் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

ஆலிவ் எண்ணெயில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது ஆரோக்கியமான கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஸ்குவாலேன் என்ற கலவை இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனுடன், இதில் அதிக அளவு பாலிபினால்கள் உள்ளன, இது இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கிறது.

பெர்ரி பழங்கள்

ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை வழக்கமாக உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஆய்வின் படி, ஒரு நாளைக்கு 100 கிராம் ப்ளாக்பெர்ரிகளை சாப்பிடுபவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிக நார்ச்சத்து கொண்ட ஜாமூன், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

அவகேடோ

அவகேடோ சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவகேடோ, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதன் காரணமாக தமனிகளில் பிளேக் குவிவதில்லை. அவகேடோ இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்தம் இலகுவாக செல்ல அனுமதிக்கிறது.
Previous Post Next Post