தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாளை ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, குமரி தென்காசி. நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜன.9-ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்