12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ..!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நடந்து முடிந்தது.

அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படித்து பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்க்கவும் எடுத்துக் கொள்ளப்படும். 10.15 மணியில் இருந்து 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம்.

தேர்வு அட்டவணை!

மார்ச் 1ஆம் தேதி தமிழ்,
மார்ச் 5ஆம் தேதி ஆங்கிலம்,
மார்ச் 8ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல்,
மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்,
மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்,
மார்ச் 19ஆம் தேதி கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் சற்றுமுன் வெளியானது. மாணவர்கள் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்காக, online portal என்ற வாசகத்தினை click செய்து HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH - 2024 என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post