- அந்தாதி என்றால் என்ன? அந்தத்தை ஆதியாகத் தொடுப்பது. ஒரு பாடலின் இறுதி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்தப் பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவது அந்தாதி ஆகும்.
- அந்தாதி என்ன பாவால் பாடப்படும்? வெண்பா, கலித்துறை
- "அந்தம் முதலா தொடுப்பது அந்தாதி" - என்று குறிக்கும் நூல் எது? யாப்பருங்கலக் காரிகை
- "வெண்பா கலித்துறை வேண்டிய பொருளில்/ பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே" - என்று கூறும் நூல் யாது? பன்னிருபாட்டியல்
- அந்தாதி இலக்கிய முன்னோடியான சங்க இலக்கியம் யாது? ஐங்குறுநூற்று தொண்டிப்பத்து, பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்து
- முதல் அந்தாதி இலக்கியம் எது? அற்புதத் திருவந்தாதி
- அற்புதத் திருவந்தாதி என்ற நூலின் ஆசிரியர் யார்? காரைக்காலம்மையார்
- பொய்கையாழ்வார் பாடிய அந்தாதி - முதல் திருவந்தாதி
- பூதத்தாழ்வார் பாடிய அந்தாதி - இரண்டாம் திருவந்தாதி
- பேயாழ்வார் பாடிய அந்தாதி - மூன்றாம் திருவந்தாதி
- நம்பியாண்டார் பாடிய அந்தாதி - திருத்தொண்டர் திருவந்தாதி
- கம்பர் பாடிய அந்தாதி - சடகோபரந்தாதி
- அபிராமிபட்டர் பாடிய அந்தாதி - அபிராமி அந்தாதி
- வெண்பா அந்தாதி என்றால் என்ன? 100 வெண்பாக்களால் ஆன அந்தாதி
- கலித்துறை அந்தாதி என்றால் என்ன? 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.
- பதிற்றந்தாதி என்றால் என்ன? வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆன 10 பாடல்களைக் கொண்டது.
- நூற்றந்தாதி என்றால் என்ன? வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆன 100 பாடல்களைக் கொண்டது.
- பதிற்றுப்பத்தந்தாதி என்றால் என்ன? 100 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒவ்வொரு சந்தத்தில் அமைவது.
- பதிற்றுப்பத்தந்தாதியின் மற்றொரு பெயர் யாது? பல்சந்தமாலை
- கலியந்தாதி என்றால் என்ன? பாடல்தோறும் 32 கலைவைப்பு அமைய 30 பாடல்களைக் கொண்டது.
- சிலேடையந்தாதி என்றால் என்ன? இருபொருள் அமைய 100 பாடல்களால் பாடுவது.
- யமக அந்தாதி என்றால் என்ன? வந்த சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வந்து ஒவ்வொரு அடியிலும் பொருள் மாறுபடுவது.
- நீரோட்டக யமக அந்தாதி என்றால் என்ன? உதடுகள் இரண்டும் ஒட்டாமல் பாடும் 100 பாடல்களைக் கொண்டது.
- ஒலியந்தாதி என்றால் என்ன? ஓரடிக்கு 16 கலை என்று 4 அடிக்கு 64 கலைகள் அமைவது. சந்தம், வண்ணம் நிறைந்து வருவது. 30 பாடல்கள் கொண்டது.
- திரிபந்தாதி என்றால் என்ன? ஒரு பாடலில் 4 அடிகளில் முதல் எழுத்து மட்டும் மாறி பிற எழுத்துக்கள் மாறாமல் ஒத்து அமைவது.
- கோவை என்றால் என்ன? தலைவன் தலைவி களவு வாழ்க்கையில் ஈடுபட்டு, பின் கற்பில் இல்லறம் நடத்தும் நிகழ்ச்சியைக் கோர்வையாகக் கூறுவது.
- கோவையின் வேறு பெயர்? அகப்பொருட் கோவை, ஐந்திணைக் கோவை
- "ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ/ முந்திய கலித்துறை நானூறென்ப" எனக் கோவைக்கு இலக்கணம் கூறும் நூல் எது? பன்னிருபாட்டியல்
- கோவைக்கான பாவகை யாது? கட்டளைக் கலித்துறை [400 பாடல்களால் ஆனது.]
- கோவையின் பிரிவுகள் யாவை? 33 கிளவிகளையும், பல துறைகளையும் கொண்டது.
- கோவையின் வகைகள் யாவை? ஒரு துறைக் கோவை, பலதுறைக் கோவை
- முதல் கோவை நூல் யாது? பாண்டிக்கோவை
- பாண்டிக்கோவையில் பாண்டி என்பவர் யார்? நின்றசீர் நெடுமாறன்
- பாண்டிக்கோவை எந்த இலக்கண நூலுக்கான எடுத்துக்காட்டாக உள்ளது? இறையனார் அகப்பொருள்
- பாண்டிக்கோவையின் காலம் யாது? எட்டாம் நூற்றாண்டு
- மாணிக்க வாசகர் பாடிய கோவை நூல் யாது? திருக்கோவையார் [திருச்சிற்றம்பலக் கோவை] இதனை முதல் கோவை என்போரும் உண்டு.
- நம்பியகப்பொருளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த கோவை நூல் யாது? தஞ்சைவாணன் கோவை
- தஞ்சைவானன் கோவையின் ஆசிரியர் யார்? பொய்யாமொழித்தேவர்
- ஒட்டக்கூத்தர் இயற்றிய கோவை நூல்? குலோத்துங்கன் கோவை
- திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய கோவை நூல்? திருக்குற்றாலக் கோவை
- மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய கோவை நூல் எது? திருவாரூர்க் கோவை
Tags:
இலக்கிய வரலாறு