- கலம்பகம் என்றால் என்ன? பல்வேறு உறுப்புக்கள் கலந்த இலக்கிய வகை
- கலம்பகம் பெயர் காரணம் யாது? கலம் + பகம் - [கலம் - 12, பகம் - 6] பதினெட்டு உறுப்புக்களைக் கொண்ட, கலந்த இலக்கிய வகை.
- பதினெட்டு வகைகள் யாவை? புயம், தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், கலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார்
- கலம்பகத்திற்கான பாவகைகள் யாவை? ஒருபோகு வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியம் வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம், வெண்டுறை வெண்பா, மருட்பா, கலிப்பா
- இறைவன் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 100
- முனிவர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 95
- மன்னர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 90
- அமைச்சர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 70
- வணிகர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 50
- ஏனையோர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 30
- காலத்தால் முந்திய கலம்பகம் எது? நந்திக் கலம்பகம்
- நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? தொள்ளாறு எறிந்த பல்லவ மன்னன் நந்தி போத்தரையன் [மூன்றாம் நந்திவர்மன்]
- நந்திக்கலம்பக காலம் யாது? கி.பி. எட்டாம் நூற்றாண்டு
- நந்திக்கலம்பகம் நந்தி வர்மன் மீது அறம் வைத்துப் பாடப்பட்டது. அறம் வைத்துப் பாடியதில் நந்திவர்மன் இறந்தார்
- "நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்" என்ற வரி இடம் பெற்ற இலக்கியம் எது? சிவஞான சுவாமிகள் சோமேசர் முதுமொழி வெண்பா
- நந்திக் கலம்பகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 99 /110
- கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் யாவர்? இரட்டைப் புலவர்கள் [கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்]
- மதுரைக்கலம்பகத்தின் ஆசிரியர் யார்? குமரகுருபரர்
- தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? இரட்டைப் புலவர்கள்
- திருவரங்கக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? சிவப்பிரகாச சுவாமிகள்
- அம்பலவாண தேசிகர் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- உலா என்றால் என்ன? உலா வருகின்ற தலைவனைக் கண்ட ஏழு பருவப் பெண்டிரும் மயங்குவதாகக் கூறப்பெறுவது உலா இலக்கியம்
- உலாவின் வேறு பெயர்கள் யாவை? பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம்
- ஏழு பருவ பெண்கள் யாவர்? பேதை [5 -7], பெதும்பை [8 -11], மங்கை [12 -13], மடந்தை [14 - 19], அரிவை [20 - 25], தெரிவை [26 - 32], பேரிளம் பெண் [33 - 40]
- உலாவின் வித்து யாது? 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்ற தொல்காப்பிய புறத்திணை பாடாண் திணை நூற்பா
- உலாவிற்கான பாவகை யாது? கலிவெண்பா
- உலாவின் பாடுடைத் தலைவனுக்கான வயதுவரம்பு யாது? 48 வயதிற்குள்
- உலாவின் பிரிவுகள் யாவை? முன்னெழு நிலை, பின்னெழு நிலை என இரு பிரிவுகள்
- முன்னெழு நிலை வகையுள் அடங்குவன யாவை? குடிச்சிறப்பு, மரபு, நீதி, ஈகை, தலைவனை நீராட்டுதல், நல்லணி பூட்டுதல், தலைவன் உலா புறப்பாடு
- பின்னெழு நிலையுள் அடங்குவன யாவை? ஏழு பருவ பெண்கள் தலைவனைக் காணல், காதல் கொள்ளல், அவர்களின் செயல்பாடுகள்
- முத்தொள்ளாயிரத்தின் பத்துப் பாடல்கள் உலா அமைப்பில் வருவன
- உலா ஒரு கூறாக இடம்பெற்ற காப்பியங்கள் யாவை? பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்
- முதல் உலா நூல் யாது? சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞானவுலா
- திருக்கயிலாய ஞானவுலாவின் வேறு பெயர்கள் யாவை? ஆதியுலா, தெய்வ உலா
- திருக்கயிலாய ஞானவுலாவின் காலம் யாது? கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
- ஒட்டக்கூத்தர் இயற்றிய உலா நூல் யாது? மூவருலா
- உலா பாடுவதில் வல்லவர் யார்? ஒட்டக்கூத்தர் [கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்]
- மூவருலா என்பது யாது? விக்கிரம சோழன், குலோத்துங்கச் சோழன், இராசராசச் சோழன் ஆகிய மூவரையும் பற்றியது.
- நம்பியாண்டார் நம்பி இயற்றிய உலா நூல்? ஆளுடைப் பிள்ளையார் திருவுலா
- சொக்கநாதருலா யாரால் இயற்றப்பட்டது? அ. கு. ஆதித்தர்
- காமராசர் உலா யாரால் இயற்றப்பட்டது? அ. கு. ஆதித்தர்
- கலைஞர் உலாவின் ஆசிரியர் யார்? பாவலர் ஏறு ச. பாலசுந்தரனார்
- பெரியார் உலாவின் ஆசிரியர் யார்? மறையரசனார்
- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலாவை இயற்றியவர் யார்? முத்துலிங்கம்
Tags:
இலக்கிய வரலாறு