பதினெண்கீழ்க் கணக்கு வினா விடைகள் - 02

  1. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பி நாகனார
  2. நான்மணிக்கடிகையின் காலம் யாது? கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
  3. நான்மணிக்கடிகையின் பாடல் எண்ணிக்கை? 2+ 104
  4. நான்மணிக்கடிகையின் பாவகை? வெண்பா
  5. கடிகை என்பதன் பொருள் யாது? கடகம் என்பதே கடிகை ஆயிற்று. கடகம் என்பது தோளில் அணியும் தோள்வளை ஆகும்.
  6. நான்மணிக்கடிகை என்பதம் பெயர்காரணம் யாது? நான்கு மணிகள் பதிக்கப்பட்ட தோள்வளை போல நான்கு நீதி மணிகளால் ஆன பாடல்களைக் கொண்ட நூல்
  7. நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் வாழ்த்தும் கடவுள் யார்? திருமால் [இரு பாடல்கள்]
  8. நான்மணிக்கடிகை நான்கு நான்கு பாடல்கள் அமைத்துப் பாடுவது என்ன வனப்பைச் சார்ந்தது? அம்மை
  9. இன்னா நாற்பதின் ஆசிரியர் யார்? கபிலர்
  10. இன்னா நாற்பதின் காலம் யாது? கி.பி. 50 - கி.பி. 125
  11. இன்னா நாற்பதின் பாடல்கள் எத்தனை? 1+40
  12. இன்னா நாற்பதின் பா யாது? வெண்பா
  13. இன்னா நாற்பது கடவுள் வாழ்த்தில் வணங்கப்படுவோர் யாவர்? சிவன், பலராமன், திருமால், முருகன்
  14. இன்னா நாற்பதின் வனப்பு யாது? அம்மை
  15. இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்? பூதஞ்சேந்தனார்
  16. இனியவை நாற்பதின் காலம் யாது? கி.பி. 5ஆம் நூற்றாண்டு
  17. இனியவை நாற்பதின் பாடல் எண்ணிக்கை யாது? 1+40
  18. இனியவை நாற்பதில் வணங்கப்படும் கடவுளர் யாவர்? சிவன், திருமால், பிரம்மன்
  19. திரிகடுக ஆசிரியர் யார்? நல்லாதனார்
  20. திரிகடுக காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  21. திரிகடுக பாடல்கள் எத்தனை? 1+100
  22. திரிகடுக பாவகை யாது? வெண்பா
  23. திரிகடுக பெயர் காரணம் யாது? சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றும் நோய் நீக்கும் மருந்து. அவை போல மனத்தின் நோயை நீக்கி வாழ்விற்கு நலமளிக்கும் மூன்று அறக்கருத்துக்களை எடுத்துரைப்பதால் திரிகடுகம்.
  24. திரிகடுகத்தின் வனப்பு யாது? ஏன்? அம்மை [அனைத்துப்பாடல்களிலும் மூறாம் அடிய்ன் நான்காம் சீரில் இம்மூன்றும், இம்மூவர் என்னும் சொற்கள் தொடர்ந்து வருவதால்]
  25. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்? பெருவாயில் முள்ளியார்
  26. ஆசாரக்கோவையின் காலம் யாது? கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
  27. ஆசாரக்கோவையின் பாடல்கள் எத்தனை? 100
  28. ஆசாரக்கோவையின் பாவகை யாது? பல்வேறு வெண்பா
  29. ஆசாரக்கோவை பெயர்க்காரணம் யாது? ஆசாரம் என்றால் ஒழுக்கம். வாழ்க்கைக்குத் தேவையான ஆசாரங்களைக் கோவையாக அடுக்கிக் கூறும் நூல் ஆசாரக்கோவை
  30. ஆசாரத்தை எவ்வகையில் குறிக்கிறார் ஆசிரியர்? கொள்ளத்தக்க ஆசாரம், தள்ளத்தக்க ஆசாரம் என இரு வகை
  31. ஆசாரக்கோவை எவற்றின் சாரமாக விளங்குகிறது? வடமொழி நூல்களான சுக்ர ஸ்மிருதி, போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம்
  32. சார்பு நூல் வகைக்கு ஆசாரக்கோவையை எடுத்துக்காட்டாகக் கூறியவர் யார்? இலக்கண விளக்க உரையாசிரியர்
  33. வடநூலார் வகுத்த நெறிமுறைகளை அறிவதற்கு ஆசாரக்கோவை துணை செய்யும் என்றவர் யார்? டாக்டர். பூவண்ணன்
  34. பழமொழியின் ஆசிரியர் யார்? முன்றுறையரையனார்
  35. பழமொழியின் காலம் எது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  36. பழமொழியின் பாடல்கள் எத்தனை? 400
  37. பழமொழியின் பாவகை யாது? வெண்பா
  38. பழமொழியின் பிரிவுகள் எத்தனை? 5
  39. பழமொழியின் இயல்கள் எத்தனை? 34
  40. கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றிய இயல்கள் எத்தனை? 9
  41. சான்றோர், நட்பின் இயல்பு பற்றிய இயல்கள் எத்தனை? 7
  42. முயற்சி, பொருள் பற்றிய இயல்கள் எத்தனை? 8
  43. அரசர், அமைச்சர், படை பற்றிய இயல்கள் எத்தனை? 6
  44. இல்வாழ்க்கை, உறவினர், வீட்டு நெறி பற்றியது? 4 இயல்கள்
  45. பழமொழியில் உள்ள வரலாற்றுச் செய்திகள் யாவை? மனுநீதிச் சோழன் மகனைத் தேர்காலில் இட்டது, பாலைக் கௌதமனார்க்கு பல்யானைச் செல்கெழு குட்டுவன் வீடு தந்தது, தொடித்தோள் செம்பியன் தூங்கும் எயிலை அழித்தது, பொற்கைப் பாண்டியன் தன் கையைக் குறைத்தது.
  46. பழமொழியில் உள்ள புராணச் செய்திகள் யாவை? பஞ்ச பாண்டவர்களும் கௌரவர்களும் பணயமாகப் பொருள் வைத்துச் சூதாடியமை.
  47. முன்றுரை அரையனார் யார்? முன்துறை என்னும் ஊரின் அரசன் [அரையன் - அரசன்]
  48. சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் யார்? காரியாசான்
  49. சிறுபஞ்ச மூலத்தின் பாடல்கள் எத்தனை? 102+3 [1-கடவுள் வாழ்த்து, 2-பாயிரங்கள்]
  50. சிறுபஞ்ச மூலம் பெயர்க் காரணம் யாது? ஐந்து வேர்கள் கலந்த மருந்து சிறுபஞ்ச மூலம். அது உடலுக்கு மருந்து ஆவது போல வாழ்க்கைக்கு மருந்தாகும் கருத்துக்களைக் கொண்டது.
  51. சிறுபஞ்ச மூலத்தில் உள்ள வேர்கள் யாவை? சிறுவழுதுணை[கத்திரிக்காய்], கண்டங்கத்திரி, சிறுமல்லி, நெருஞ்சி, பெருமல்லி
  52. பெரும்பஞ்ச மூலத்தின் வேர்கள் யாவை? வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை
  53. பெரும்பஞ்ச மூலம் எங்கு குறிக்கப்பட்டு உள்ளது? பதார்த்த குண சிந்தாமணி, பொருள்தொகை நிகண்டு
  54. காரியாசானின் ஒருசாலை மாணாக்கர் யார்? கணிமேதாவியார்
  55. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்? கூடலூர் கிழார்
  56. முதுமொழிக் காஞ்சியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  57. முதுமொழிக் காஞ்சியின் பாடல்கள் எத்தனை? 100
  58. முதுமொழிக் காஞ்சியின் அதிகாரங்கள் எத்தனை? 10 [அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள்]
  59. முதுமொழிக்காஞ்சியின் பாவகை யாது? குறள் தாழிசை
  60. முதுமொழிக் காஞ்சியின் அதிகாரங்கள் எவ்வாறு தொடங்குகின்றன? அதிகாரங்களின் முதல் பாடலின் முதல் வரி 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' எனத் தொடங்குகின்றது. [இது அம்மை வனப்பின் பாற்பட்டது]
  61. ஐங்குறுனூற்றைத் தொகுத்த கூடலூர் கிழாரே முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் என்று கூறுதலும் உண்டு.
  62. ஏலாதியின் ஆசிரியர் யார்? கணிமேதாவியார்
  63. ஏலாதியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  64. ஏலாதியின் பாவகை யாது? வெண்பா
  65. ஏலாதியின் பாடல்கள் யாவை? 80+2 [பாயிரம்-1, தற்சிறப்புப் பாயிரம் -1]
  66. ஏலாதியின் மருந்துகள் யாவை? ஏலம்-1 பங்கு, இலவங்கம்-2, நாககேசர-3, மிளகு-4, திப்பிலி-5, சுக்கு-6 பங்கு கலந்த மருந்து ஏலாதி. அம்மருந்து உடலுக்கு நலம் தருவது போல மனதிற்கு நலம் தரும் கருத்துக்களை உரைப்பது.
  67. ஒன்பதை ஏலாதி எவ்வாறு குறிக்கிறது? தொண்டு
Previous Post Next Post