சமயக் காப்பியங்கள் வினா விடைகள் - 02

  1. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
  2. வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது? கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி
  3. வீரமாமுனிவருக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் அளித்த பெயர் யாது? தைரியநாதன் [இதைத் தமிழ்ப்படுத்தியே வீரமாமுனிவர் என மாற்றினார்]
  4. தேம்பாவணி எந்த சமயக் காப்பியம்? கிறித்தவம்
  5. தேம்பாவணியின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  6. தேம்பாவணியின் பாவகை? விருத்தப்பா
  7. தேம்பாவணியின் பாடல்கள் எத்தனை? 3615
  8. தேம்பாவணியின் பெயர் காரணம் யாது? தேம்பா+ அணி - வாடாத மாலை, தேம்+பா+அணி - தேன் ஒத்த பாக்களால் ஆன நூல்
  9. தேம்பாவணியின் காண்டங்கள் எத்தனை? 3
  10. தேம்பாவணியின் படலங்கள் எத்தனை? ஒவ்வொரு காண்டத்திற்கும் 12 வீதம் 36 படலங்கள்
  11. தேம்பாவணியின் காப்பியத் தலைவன் யார்? வளன் [சூசை]
  12. தேம்பாவணியை புறநிலைக் காப்பியம் என்றவர் யார்? வீரமாமுனிவர்
  13. கம்பராமாயணத்தில் பாடப்படாத பொருள் யாது? இன்பம்
  14. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் யார்? ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை
  15. இரட்சணிய யாத்திரிக பாடல்கள் எண்ணிக்கை? 3766
  16. இரட்சணிய யாத்திரிக பாக்கள் யாவை? கலிப்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, வஞ்சிப்பா
  17. இரட்சணிய யாத்திரிகம் இயற்றி முடிக்க ஆன காலம்? 14 வாரம்
  18. இரட்சணிய யாத்திரிகம் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு? 1891
  19. இரட்சணிய யாத்திரகத்தின் எதன் தழுவல் நூல்? ஜான் பன்யன் எழுதிய 'தி பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்' என்பதன் தழுவல்
  20. இரட்சணிய யாத்திரிகத்தின் தலைவன், தலைவி யார்? கிறித்தவன், ஆன்மா
  21. இரட்சணிய யாத்திரிகம் நாயகன் நாயகி பாவத்தில் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
  22. இயேசு காவியத்தின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
  23. இயேசு காவியத்தின் காலம் யாது? 1981
  24. இயேசு காவியம் எத்தனை பாகம் கொண்டது? 5
  25. இயேசு காவிய தலைப்புகள் எத்தனை? 149
  26. சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்? உமறுபுலவர்
  27. உமறுபுலவரை ஆதரித்த வள்ளல் யார்? சீதக்காதி
  28. சீறாப்புராணத்தின் காலம் யாது? 17 ஆம் நூற்றாண்டு
  29. சீறாப்புராணத்தின் பா யாது? விருத்தப்பா
  30. சீறாப்புராண படலங்கள் யாவை? 92
  31. சீறாப்புராண பாடல்கள் எத்தனை? 5027
  32. சீறாப்புராண காண்டங்கள் எத்தனை? 3 [விலாதத்துக் காண்டம், நுபுல்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம்]
  33. சீறாப் புராண கதைத்தலைவன் யார்? நபிகள் நாயகம்
  34. முகியித்தீன் புராணத்தின் வேறு பெயர் யாது? குத்பு நாயகம்
  35. முகியித்தீன் புராண ஆசிரியர் யார்? சேகுனாப் புலவர்
  36. முகியித்தீன் புராணத்தின் காலம் யாது? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  37. முகியித்தீன் புராண காண்டங்கள் எத்தனை? 2
  38. முகியித்தீன் புராண பாடல்களின் எண்ணிக்கை? 1343
  39. மருமக்கள் வழி மான்மியத்தின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  40. மருமக்கள் வழி மான்மியத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  41. பாண்டியன் பரிசை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
  42. பாண்டியன் பரிசு வெளியான ஆண்டு எது? கி.பி. 1943
  43. பூங்கொடியின் ஆசிரியர் யார்? முடியரசன்
  44. பாரதசக்தி மகாகாவியத்தின் ஆசிரியர் யார்? சுத்தானந்த பாரதியார்
  45. பாரதசக்தி மகாகாவியத்தின் காலம் யாது? கி.பி. 20 ஆம் நூற்றாண்டு
Previous Post Next Post