சிற்றிலக்கியம் வினா விடைகள் - 03

  1. சதகம் என்பதன் பொருள் யாது? சதம் என்பது 100 எனப் பொருள்படும். 100 பாடல்களைக் கொண்டது. சத்+அகம் எனப் பகுக்க, சத் - உண்மை. உண்மையை உட் பொருளாகக் கொண்டது.
  2. முதல் சதக நூல் யாது? திருச்சதகம்
  3. திருச்சதகத்தின் ஆசிரியர் யார்? மாணிக்க வாசகர்
  4. திருச்சதகத்தின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  5. கார்மண்டல சதகத்தின் காலம் யாது? கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
  6. கார்மண்டல சதகத்தின் ஆசிரியர் யார்? ஆறைக் கிழார்
  7. இலக்கண விளக்கம் சதகத்திற்கு வகுக்கும் விளக்கம் யாது? "விழையும் ஒரு பொருள்மேல் ஒருநூறு/ தழைய உரைத்தல் சதகம் என்ப"
  8. சோழமண்டல சதகத்தின் ஆசிரியர் யார்? ஆத்மநாத தேசிகர்
  9. தொண்டை மண்டல சதகத்தின் ஆசிரியர் யார்? படிக்காசுப் புலவர்
  10. துயிலெடை என்பதன் வேறுபெயர்கள் யாவை? பள்ளியெழுச்சி, திருப்பள்ளி எழுச்சி
  11. "சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்" என்னும் குறிப்புத் தொல்காப்பியத்தில் உள்ளது.
  12. திருப்பள்ளி எழுச்சியை மாணிக்கவாசகரும், தொண்டரடி பொடியாழ்வாரும் பாடியுள்ளனர். இவையே முதல் த்ருப்பள்ளி எழுச்சி
  13. மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடிய காலம் யாது? 9ஆம் நூற்.
  14. பாரதியார் பாடிய திருப்பள்ளி எழுச்சி யாது? பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி
  15. குறிசொல்கின்ற மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட சிற்றிலக்கியம் யாது? குறவஞ்சி
  16. குறவஞ்சி பெயர்க்காரணம் யாது? குறி சொல்லும் வஞ்சி[பெண்]யை மையமாகக் கொண்ட இலக்கியம்
  17. குறவஞ்சியின் வேறுபெயர்கள் யாவை? குறம், குறத்திப்பாட்டு
  18. முதல் குறவஞ்சி இலக்கியம் யாது? திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி
  19. திருக்குற்றாலக் குறவஞ்சியின் காலம் யாது? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
  20. குமரகுருபரர் இயற்றிய குறவஞ்சி - மீனாட்சியம்மைக் குறம்
  21. திரிகூட ராசப்பக் கவிராயர் - திருக்குற்றாலக் குறவஞ்சி
  22. சிவக்கொழுந்து தேசிகர் - சரபேந்திர பூபால குறவஞ்சி, பிரகதீசுவரர் குறவஞ்சி
  23. குமரகுருபர தேசிகர் - ஞானக் குறவஞ்சி
  24. பாவநாச முதலியார் - கும்பேசர் குறவஞ்சி
  25. வேதநாயக சாஸ்திர்யார் - பெத்தலெகம் குறவஞ்சி
Previous Post Next Post