தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 11

61) பயன் + இலா என்பதனைச் சோ்த்து எழதக் கிடைக்கும் சொல்

 

A) பயன்னில்லா

B) பயன்இலா

C) பயனிலா

D) பயன் இல்லா

 

62) சீரிளமை – பிரித்தெழுதுக.

 

A) சீர் + இளமை

B) சீா்மை + இளமை

C) சீரி + இளமை

D) சீற் + இளமை

 

63) வெங்கரி – பிரித்தெழுதுக.

 

A) வெம் + கரி

B) வெங் + கரி

C) வெண் + கரி

D) வெம்மை + கரி

 

64) சேர்த்து எழுதுக - முத்து + சுடா் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

 

A) முத்துசுடா்

B) முச்சுடா்

C) முத்துடா்

D) முத்துச்சுடா்

 

65) முதுமை + மொழி சோ்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக

 

A) முதுமொழி

B) முதியமொழி

C) முதல்மொழி

D) முதுமைமொழி

 

66) பிரித்து எழுதுக - உயா்வடைவோம்

 

A) உயா் + வடைவோம்

B) உயா் + வடை + ஓம்

C) உயா்வு + அடைவோம்

D) உயா் + அடைவோம்

 

67) பிரித்து எழுதுக - “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

 

A) செம்மை + பயிர்

B) செம் + பயிர்

C) செமை + பயிர்

D) செம்பு + பயிர்

 

68) எல் – எதிர்ச்சொல் தருக

 

A) பகல்

B) எல்லை

C) தானியம்

D) இரவு

 

69) வெற்பு – எதிர்ச்சொல் தருக

 

A) மலை

B) பள்ளம்

C) மழை

D) பட்டம்

 

70) பொருந்தாத இணை எது?

 

A) க்ராப் – செதுக்கி

B) கா்சர் – ஏவி

C) கர்வர் – உலவி

D) ஃபோல்டா் – உறை

 

71) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக - ”குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”

 

A) கருங்காலி

B) செங்காலி

C) சந்தனம்

D) அகில்

72) பொருந்தாத இணையைக் கண்டறிக

 

A) துவரை -பவளம்

B) மல்லல் – வளம்

C) கோடு – கொம்பு

D) செறு – செருக்கு

 

73) பொருந்தாத இணையைக் கண்டறிக.

 

A) ஏறுகோள் – எருதுகட்டி

B) திருவாரூா் – கரிக்கையூர்

C) ஆதிச்சநல்லுார் – அரிக்கமேடு

D) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

 

74) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

 

A) நாற்று – நடுதல்

B) நீா் – பாய்ச்சுதல்

C) கதிர் – அறுத்தல்

D) கறை – அடித்தல்

 

 

75) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

 

A) அப்துல்கலாம் பிறந்த நாள் – ஆசிரியா் நாள்

B) விவேகானந்தா் பிறந்த நாள் – தேசிய இளைஞா் நாள்

C) காமராசா் பிறந்த நாள் – கல்வி வளா்ச்சி நாள்

D) ஜவஹா்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்

 

76) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

 

A) திங்கள் – மாதம்

B) பகலவன் – கதிரவன்

C) மெய் – உண்மை

D) பொய்மை – மெய்ம்மை

 

 

77) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக

 

1) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது

2) பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது

3) விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம்

4) விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைப்பது வழக்கம்

 

A) 1 மற்றும் 3 சரி

B) 2 மற்றும் 3 சரி

C) 1 மற்றம் 4 சரி

D) 2 மற்றும் 4 சரி

 

78) இளமைப் பெயா்கள் கண்டு பொருத்துக

 

a) புலி – குட்டி

b) சிங்கம் – கன்று

c) ஆடு – 3) குருளை

d) யானை – 4) பறழ்

 

A)    4      3        1        2

B)    3      4        2        1

C)    3      1        4        2

D)    4      1        2        3

 

79) வழுவற்ற தொடரைக் காண்க

 

A) கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதின

B) கைகள் இரண்டும் உதவவே என சான்றோர்கள் கருதின

C) கை இரண்டும் உதவவே எனச் சான்றோர் கருதினா்

D) கைகள் இரண்டும் உதவவே எனச் சான்றோர்கள் கருதினா்

 

80) வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக

 

A) சிற்பி சிலையைச் செய்தான்

B) சிற்பி சிலையைச் செதுக்கினான்

C) சிற்பி சிலையை வனைந்தான்

D) சிற்பி சிலையை வார்த்தான்

Previous Post Next Post