1.
வேர்ச் சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.
(A)
வா – வந்து
(B)
காண் – கண்ட
(C)
கொள் – கொண்டு
(D)
நில் -நின்று
2.
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க. - வாழியர்
(A)
வாழ்
(B)
வாழி
(C)
வா
(D)
வாழிய
3.
ஒரு பொருள் தரும் பல சொற்கள் - “நெருப்பு”
(A)
அனல், கனல்
(B)
தணல், வெயில்
(C)
தண்ணீர், தீ
(D)
வெயில், குளிர்
4)
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக. - அலை – அளை
(A)
கூப்பிடு – தயிர்
(B)
நத்தை – சேறு
(C)
துன்பம் – சோறு
(D)
கடல் – பாம்புப்புற்று
5.
விலை, விளை, விழை போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க
(A)
உண்டாக்குதல், விரும்பு, பொருளின் மதிப்பு
(B)
விரும்பு, பொருளின் மதிப்பு. உண்டாக்குதல்
(C)
விரும்பு, உண்டாக்குதல், பொருளின் மதிப்பு
(D)
பொருளின் மதிப்பு,
உண்டாக்குதல், விரும்பு
6.
கீழ்க்கண்டவற்றுள் திசைச்சொற்களைக் கண்டறிக :
(A)
மண், பொன்
(B)
சாவி, சன்னல்
(C)
அழுவம், வங்கம்
(D)
விடம், மடம்
7.
‘சமுதாயம்’ என்ற வடசொல்லின் நேரான தமிழ்ச்சொல்
(A)
மன்பதை
(B)
குழாம்
(C)
நெறி
(D)
உண்மை
8.
பிழை திருத்தம் - சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1.
பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
2.
பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.
3.
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
4.
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
(A)
1 மற்றும் 3
(B)
3 மற்றும் 4
(C)
2 மற்றும் 3
(D)
1 மற்றும் 4
9.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. - ‘தாமரை இலை நீர்போல ‘
(A)
ஏமாற்றம்
(B)
பற்றுதல் இன்றி
(C)
ஏற்றம்
(D)
இரக்கம்
10.
பொருந்தா இணையைக் கண்டறிக.
(A)
தாய்தந்தை – உம்மைத்தொகை
(B)
பொற்றொடி வந்தாள்
– உவமைத்தொகை
(C)
பனைமரம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(D)
வளர்தமிழ் – வினைத்தொகை
11.
சொல்லுக்குரிய பொருளை அறிக. - பொம்மல்
(A)
பொம்மை
(B)
சோறு
(C)
பொம்மலாட்டம்
(D)
பொதும்பல்
12.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல். - குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
(A)
குறிஞ்சி, மருதம் நிலங்கள்
(B)
மருதம், நெய்தல் நிலங்கள்
(C)
குறிஞ்சி, நெய்தல் நிலங்கள்
(D)
முல்லை, பாலை நிலங்கள்
13.
வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து பொருள் கூறு.- விலை – விளை
(A)
உண்டாக்குதல் – பொருளின் மதிப்பு
(B)
பொருளின் மதிப்பு – விரும்பு
(C)
உண்டாக்குதல் – விரும்பு
(D)
பொருளின் மதிப்பு
– உண்டாக்குதல்
14.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல். - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
(A)
செய்வினை வாக்கியம்
(B)
செயப்பாட்டு வினை வாக்கியம்
(C)
தன்வினை வாக்கியம்
(D)
பிறவினை வாக்கியம்
15.
கீழ்க்கண்டவற்றுள் செயப்பாட்டு வினைத்தொடர் எது எனக் கண்டறிக.
(A)
ஓட்டுநரா பேருந்தை இயக்கினார்?
(B)
ஓட்டுநர் பேருந்தை இயக்கினார்.
(C)
ஓட்டுநரால் பேருந்து
இயக்கப்பட்டது.
(D)
ஓட்டுநர் பேருந்தை இயக்கவில்லை
16.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
(A)
பூங்குழலி திருக்குறள் கற்றள்
(B)
பூங்குழலி திருக்குறள் கற்கவில்லை
(C)
பூங்குழலி திருக்குறள் கற்றாளா?
(D)
பூங்குழலி திருக்குறள்
கற்பித்தாள்
17.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். - தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
(A)
தூது இலக்கியம் எவ்வகையைச்
சார்ந்தது?
(B)
சங்க இலக்கியத்தை சார்ந்ததா?
(C)
தூது இலக்கியம் எக்காலத்தைக் குறிக்கிறது?
(D)
சங்க மருவிய கால நூல்கள் என்னென்ன?
18.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் - எங்கள் வீட்டில் தக்காளி இல்லை
(A)
உங்கள் வீட்டில் இருக்கிற தக்காளி எவ்வளவு?
(B)
உங்கள் வீட்டில் தக்காளி
இருக்கிறதா?
(C)
தக்காளி வீட்டில் இருக்கிறதா?
(D)
தக்காளி உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?
19.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். - திருக்குறள் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
(A)
திருக்குறள் எத்தனை
குறள்பாக்களைக் கொண்டுள்ளது?
(B)
திருக்குறள் அதிகாரங்கள் எத்தனை?
(C)
திருக்குறள் எதற்கான குறள்களைக் கொண்டுள்ளது?
(D)
திருக்குறளை இயற்றியவர் யார்?
20.
அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A)
கிளி, தையல், மனிதன், தேனீ
(B)
கிளி, மனிதன், தையல், தேனீ
(C)
கிளி, தேனீ, தையல்,
மனிதன்
(D)
தையல், தேனீ, கிளி, மனிதன்