தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 14

21. பொருத்துக:

 

(a) உழைப்புக்கு கொடுப்பது   –     1. குரல்

(b) உரிமைக்கு கொடுப்பது    –     2. உணவு

(c) கவலைக்கு கொடுப்பது   –     3. கூலி

(d) பசித்தவனுக்கு கொடுப்பது      –     4. விடை

 

(A)          2              3              1              4

(B)          3              4              2              1

(C)          1              4              3              2

(D)          3              1              4              2

 

22. சொற்களை ஒழுங்குபடுத்துக - ‘முறையாகப் பண்டமாற்று வணிகம் தொடங்கியது’

 

(A) வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது

(B) பண்டமாற்று வணிகம் தொடங்கியது முறையாக

(C) முறையாகத் தொடங்கியது பண்டமாற்று வணிகம்

(D) வணிகம் தொடங்கியது பண்டமாற்று முறையாக

 

23. சொற்களை ஒழுங்குபடுத்துக - “செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம் இப்போது நாம்“

 

(A) இப்போது இருக்கிறோம் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் நாம்

(B) இருக்கிறோம் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் நாம் இப்போது

(C) இருக்கிறோம் நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில்

(D) நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம்

 

24. பொருத்தமான காலம் அமைத்தல் - சரியானத் தொடரைத் தேர்ந்தெடு

 

(A) மாலனை கந்தன் வீழ்த்தினான் (இறந்த காலம்)

(B) மாலனை கந்தன் வீழ்த்துவான் (நிகழ்காலம்)

(C) மாலனை கந்தன் வீழ்த்துகிறான் (எதிர்காலம்)

(D) மாலனை கந்தன் வீழ்த்திச் சென்றான் (நிகழ்காலம்)

 

25. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு. - ஆடு –  சரியான சொல்

 

(A) கன்று

(B) குட்டி

(C) குழவி

(D) குருளை

 

26. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க - விளையாட்டு, பறவை, பாட்டு, திடல்

 

(A) பறவை பாட்டு

(B) பாட்டு விளையாட்டு

(C) விளையாட்டுத் திடல்

(D) பறவை விளையாட்டு

 

27. சரியான எழுத்து வழக்கினைக் கண்டறிக - தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சது

 

(A) தேங்கா உழுந்து மண்டை உடைந்தது

(B) தேங்காய் விழுந்து மண்ட உடைந்தது.

(C) தேங்காய் விழுந்து மண்டை உடைந்தது

(D) தேங்காய் விழுந்து மண்டை உடைஞ்சது

 

28. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்ந்தெடு.

 

(A) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

(B) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது

(C) வறட்சி அனைத்து இடங்களையும் பாதித்துள்ளது

(D) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன

 

29. பின்வரும் தொடர்களில் எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

 

(A) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமல் போவாது

(B) தேர்வெழுத வேகமாகப் போங்க நேரமானால் பதட்டமாயிரும்

(C) காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

(D) காலத்துக்கேத்த மாதிரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்

 

30. தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போது

 

(A) அரைப்புள்ளி

(B) முக்காற்புள்ளி

(C) ஒற்றை மேற்கோள் குறி

(D) இரட்டை மேற்கோள் குறி

 

31. குடந்தை என வழங்கப்படும் ஊர்ப் பெயரைக் கண்டறிக

 

(A) குடுமியான் மலை

(B) கும்பகோணம்

(C) குற்றாலம்

(D) குடவாசல்

 

32. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

 

(A) திருச்சிராப்பள்ளி   –     திருச்சி

(B) புதுக்கோட்டை            –     புதுவை  

(C) மயிலாப்பூர்         –     மயிலம்  

(D) நாகர்கோவில்            –     நாகை

 

33. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக - ‘எக்ஸ்பெரிமென்ட்’

 

(A) செய்முறை

(B) சோதனை

(C) பரிசோதனை

(D) உற்றுநோக்கல்

 

34. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - செக்

 

(A) காசோலை

(B) வரைவோலை

(C) பணத்தாள்

(D) பற்று அட்டை

 

35. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக.

 

(a) Cabinet                          –              1. எல்லை

(b) Cultural                         –              2. மனிதநேயம்

(c) Humanism                    –              3. பண்பாடு

(d) Boundaries                  –              4. அமைச்சரவை

 

(A)          4              3              2              1

(B)          2              4              1              3

(C)          3              2              4              1

(D)          1              2              3              4

 

36. உடன்பட்டுக் கூறும் விடை என்பதை கீழ்வருவனவற்றுள் எந்த விடையைக் கூறலாம்?

 

(A) உற்றது உரைத்தல் விடை

(B) நேர்விடை

(C) இனமொழி விடை

(D) உறுவது கூறல் விடை

 

37. விடை எத்தனை வகைப்படும்? விடை வகைகள்

 

(A) இரண்டு

(B) ஆறு

(C) எட்டு

(D) ஐந்து

 

38. அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக - ஸ்டேப்ளர் (Stapler)

 

(A) மை பொதி

(B) மடிப்புத் தாள்

(C) கம்பி தைப்புக் கருவி

(D) கோப்பு

 

39. அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக - ரப்பர் ஸ்டேம்ப் (Rubber Stamp)

 

(A) கோப்பு

(B) இழுவை முத்திரை

(C) மடிப்புத் தாள்

(D) கம்பி தைப்புக் கருவி

 

40. அலுவல் சார்ந்த (கலைச்சொல்) சொற்கள் - சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

 

(A) உருபன் – உரேபன்

(B) ஒலியன் – ஒலியன்

(C) பேரகராதி – பேராகராதி

(D) ஒப்பிலக்கணம் – ஒப்பில் இலக்கணம்

Previous Post Next Post