தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 15

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. மேலவீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத் தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது. அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.

 

நெல்லை நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளன. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர் கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.

 

41. காவற்புரை என்றால் என்ன?

 

(A) சிறைச்சாலை

(B) காவற்சாலை

(C) காவலர்

(D) அரசர்

 

42. கூலம் என்பது எதைக் குறிக்கும் ?

 

(A) பயிறு

(B) அரிசி

(C) தானியம்

(D) பயறு

 

43. அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எது?

 

(A) அணிகலன்

(B) பொன்

(C) தட்டச்சன்

(D) அக்கசாலை

 

44. பாண்டிய மன்னரை வரவேற்ற இடம் எது?

 

(A) அயனபுரம்

(B) அரண்மனை

(C) பாண்டியபுரம்

(D) பாண்டியர்

 

45. நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது ?

 

(A) நெல்லையப்பர்

(B) பேட்டை

(C) காவலர்

(D) நின்றசீர்

 

46. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

 

(A) நான் வாங்கிய நூல் இது அல்ல

(B) நான் வாங்கிய நூல் இது அன்று

(C) நான் வாங்கிய நூல்கள் இது அல்ல

(D) நான் வாங்கிய நூல்கள் இவை அன்று

 

47. ஒருமை – பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.

 

(A) பகைவர் நீவீர் அல்லர்

(B) பகைவர் நீவீர் அல்லீர்

(C) பகைவர் நீவீர் அல்லோம்

(D) பகைவர் நீவீர் அல்ல

 

48. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

 

(A) மதலை, நெகிழி, அழுவம், சென்னி, உரவு நீர், கரையும்

(B) அழுவம், உரவு நீர், மதலை, நெகிழி, சென்னி, கரையும்

(C) நெகிழி, அழுவம், உரவு நீர், கரையும், மதலை, சென்னி

(D) அழுவம், உரவு நீர், கரையும், நெகிழி. சென்னி, மதலை

49. ‘கெடுதல்’ என்ற தொழிற்பெயர் எவ்வாறு திரியும் ?

 

(A) கெடு, கேடு

(B) கொடு, கோடு

(C) கேடு, கோடு

(D) கெடு, கொடு

 

50. விகுதி பெறாத தொழிற்பெயர்

 

(A) கூத்து

(B) வேக்காடு

(C) கடவுள்

(D) ஏற்றுமதி

 

51. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.

 

பகுதி I               பகுதி II           

 

(a) குறிஞ்சி    -   1. வருணன்

(b) முல்லை     -      2. முருகன்

(c) மருதம்   -     3. திருமால்

(d) நெய்தல்   -   4. இந்திரன்

 

(A)          3              1              4              2

(B)          2              3              4              1

(C)          1              2              3              4

(D)          4              1              2              3

 

52. எடுத்துக்காட்டினை பொருத்துக - மரம், காடு –  மா, கருவேலங்காடு

 

(A) இடுகுறிப்பெயர்     –     காரணப்பெயர்

(B) இடுகுறிப்பெயர்     –     இடுகுறி சிறப்புப்பெயர்

(C) பண்புப்பெயர்       –     இடுகுறிப்பெயர்

(D) இடுகுறிப்பெயர்     –     சினைப்பெயர்

 

53. சொல் –  பொருள் பொருத்துக.

 

(A) காலை        –     பணி

(B) தால்          –     நாக்கு

(C) தழை          –     கட்டு

(D) வேலை       –     வேளை

 

54. பிழையற்ற தொடரைக் கண்டறிக.

 

(A) வலதுபக்கச் சுவரில் எழுதாதே

(B) இடப் பக்கச் சுவரில் எழுதாதே

(C) வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே

(D) இடது பக்கச் சுவற்றில் எழுதாதே

 

55. சந்திப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.

 

(A) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.

(B) கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.

(C) கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.

(D) கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.

 

56. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக.

 

(A) தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.

(B) “தில்லான்” இந்திய தேசிய இராணுவத்தின், இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.

(C) தில்லான், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.

(D) தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின், இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்’.

57. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

 

(A) மனிதா, மனிதா ! அழைப்பது கேட்கிறதா? எங்கு பார்க்கிறாய் ; யாரைத் தேடுகிறாய்?

(B) மனிதா மனிதா அழைப்பது கேட்கிறதா; எங்கு பார்க்கிறாய் ; யாரைத் தேடுகிறாய்?

(C) மனிதா ! மனிதா ! அழைப்பது கேட்கிறதா? எங்கு பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்?

(D) மனிதா, மனிதா, அழைப்பது கேட்கிறதா? எங்கு பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்?

 

58. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.

 

(A) கோவை      –     கோயம்புத்தூர்

(B) திருச்சி        –     திருச்சிராப்பள்ளி

(C) நெல்லை     –     நெய்வேலி

(D) புதுவை       –     புதுச்சேரி

 

59. ‘சனி நீராடு’ எப்புலவரின் வாக்கு ?

 

(A) பாரதியின் வாக்கு

(B) பாரதிதாசனின் வாக்கு

(C) ஒளவையின் வாக்கு

(D) கம்பரின் வாக்கு

 

60. சரியான எண்ணடையைக் கண்டறிக.

 

(A) ஒரு இரவு

(B) ஒன்று இரவு

(C) ஒன் இரவு

(D) ஓர் இரவு

Previous Post Next Post