61.
‘நன்மொழி’ – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
(A)
நல்ல மொழி
(B)
தீமொழி
(C)
நற்சொல்
(D)
நன்மை
62.
குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக - அழி – ஆழி
(A)
அழித்தல் – வீரம்
(B)
வயல் – கடல்
(C)
நெருப்பு – பறவை
(D)
அழித்தல் – கடல்
63.
மதி –
இரு பொருள் கண்டறிக.
(A)
நிம்மதி, மதித்தல்
(B)
நிலா, அறிவு
(C)
சந்திரன், அழகு
(D)
இடை, கடை
64.
இரு பொருள் தருக - கால்
(A)
கால் பங்கு பிரித்துக்கொடு,
ஈரம் பார்த்து கால் வை
(B)
கால் வலிக்கிறது. காலில் செருப்பு அணி
(C)
கால் முறிந்தது. காலில் புண் உள்ளது
(D)
கடல் அலை, கால் பாகம் உண்டு.
65.
இச்செயலைச் செய்தது மங்கையா? மடந்தையா? என்று வினவுவது
(A)
கொடை வினா
(B)
ஏவல் வினா
(C)
ஐய வினா
(D)
அறியா வினா
66.
பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும்! வருந்தி உழைத்தாலும்
உழவுத் தொழிலே சிறந்தது – சரியான இணைப்புச்சொல்லை எழுது.
(A)
எனவே
(B)
அதனால்
(C)
ஆகையால்
(D)
அதுபோல
67.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக. (நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்
____________ துன்பப்பட நேரிடும்.)
(A)
ஏனெனில்
(B)
இல்லையென்றால்
(C)
அதனால்
(D)
ஆகையால்
68.
பிரித்தெழுதுதல் - ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A)
இரண்டு + டல்ல
(B)
இரண் + அல்ல
(C)
இரண்டு + இல்ல
(D)
இரண்டு + அல்ல
69.
பிரித்து எழுதுக - ‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A)
பெரு + கடல்
(B)
பெருமை + கடல்
(C)
பெரிய + கடல்
(D)
பெருங் + கடல்
70.
இரு பொருள் கொண்ட ஒரு சொல். ( அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை .......... பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி ...................... )
(A)
வழக்கு
(B)
அழகு
(C)
நடை
(D)
நயம்
71.
அடைப்புக்குறிக்குள் உள்ள சொல்லை பொருத்தமான இடத்தில் எழுது (அவர்)
(A)
என் வீடு _______________ உள்ளது.
(B)
தம்பி ___________ வா.
(C)
நீர் __________________ தேங்கி இருக்கிறது.
(D)
யார்
____________ தெரியுமா?
72.
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (வேற்றுமை)
(A)
_______________ இறக்கமும் மலைக்கு அழகு
(B)
அழுகையும் _______________ வாழ்வில் இயல்பு
(C)
________________ முதுமையும் யாவர்க்கும் உண்டு
(D)
ஒற்றுமை கண்டால்
_______________________ நீங்கும்
73.
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (உணவு)
(A)
உறவுக்கு _______________________ கொடு
(B)
பசித்தவனுக்கு
_______________ கொடு
(C)
உழைப்புக்கு _____________________ கொடு
(D)
உரிமைக்கு _____________________ கொடு
74.
குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது காக்கையின் கூட்டில் முட்டையிடும். - சரியான இணைப்புச்
சொல் எது ?
(A)
அதனால்
(B)
ஆகையால்
(C)
எனவே
(D)
ஏனெனில்
75.
கல் – கூட்டுப் பெயர் - சரியான எண்ணடையைத்
தேர்வு செய்க.
(A)
கல்லுக்கூட்டம்
(B)
கற்குலை
(C)
கற்கட்டு
(D)
கற்குவியல்
76.
தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு. - ஆராயும் அறிவு உடையவர்கள் ......... சொற்களைப் பேசமாட்டார்.
(A)
உயர்வான
(B)
விலையற்ற
(C)
பயன்தராத
(D)
பயன் உடைய
77.
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் - சரியான இணையைத் தேர்ந்தெடு
(A)
தாள் – முடி
(B)
பனி – குளிர்
(C)
அரம் –
வீரம்
(D)
கரம் –
கால்
78.
தவறான இணையைத் தேர்க.
(A)
தொண்டு – Charity
(B)
தத்துவம் – Philosophy
(C)
பகுத்தறிவு – Integrity
(D)
சீர்திருத்தம் – Reform
79.
கலைச் சொற்களை அறிதல் - சரியான இணையைத் தேர்க.
(A)
ஆன்லைன் ஷாப்பிங் – மின்னணு வணிகம்
(B)
கிரெடிட் கார்டு – காசோலை
(C)
ஈ காமர்ஸ் –
மின்னணு மயம்
(D)
டிமாண்ட் டிராப்ட் –
வரைவோலை
80.
‘Epigraph’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
தேர்ந்தெடுக்க.
(A)
சித்திர எழுத்து
(B) கல்வெட்டு
(C)
செப்பேடு
(D)
ஒப்பெழுத்து