தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 20

41. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று - வந்துடறேன்

 

(A) வந்து தருகிறேன்

(B) வந்து விடுகிறேன்

(C) வந்து விட்டேன்

(D) வந்து ஓடுகிறேன்

 

42. இரு பொருள் தருக - திங்கள்

 

(A) கிழமை, சந்திரன்

(B) நாள், சூரியன்

(C) பூமி, நட்சத்திரம்

(D) உலகம்,ஞாயிறு

 

43. இருபொருள் தரக்கூடிய சொல் ( ஆடை தைக்க உதவுவது _________. மூதுரை அற _________)

 

(A) பஞ்சு

(B) நூல்

(C) ஊசி

(D) தையல்

 

44. இருபொருள் தருக - மாலை

 

(A) பூமாலை, மாலைப்பொழுது

(B) பூக்கள், சிறுபொழுது

(C) பூ, காலைப்பொழுது

(D) பூக்கள், பெரும்பொழுது

 

45. குறில், நெடில் வேறுபாடுணர்ந்து பொருளறிக. - அறு –ஆறு

 

(A) நதி – ஓர் எண்

(B) வெட்டுதல் –அறுத்தல்

(C) வெட்டுதல் –  நதி

(D) அறுத்தல் – கட்டுதல்

 

46. கோடிட்ட இடங்களுக்கு பொருந்திய சொற்களைத் தேர்க. (  __________ வில் _________ குளித்தது. )

 

(A) விடு,வீடு

(B) சுடு,சூடு

(C) மடு,மாடு

(D) அடு.ஆடு

 

47. கூற்று காரணம் – சரியா தவறா?

 

கூற்று 1 : பழந்தமிழர்கள், மழைச்சோற்று நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

கூற்று 2 : ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.

கூற்று 3 : ஊர் பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர்.

கூற்று 4 : மழையில் நனைந்து கொண்டே உண்பர்.

 

(A) கூற்று 1 தவறு, 2, 3, 4 சரி

(B) கூற்று 1, 2, 3 சரி, 4 மட்டும் தவறு

(C) கூற்று 1, 2, 3, 4 சரி

(D) கூற்று 1, 2 சரி, 3, 4 தவறு

 

48. கூற்று – சரியா தவறா?

 

கூற்று 1 : தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலை ஞாயிறு

கூற்று 2 :  கூத்துக்கலையின் ஒப்பனை, கதை சொல்லும் முறை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புதுவித நாடகங்களை உருவாக்கியவர்

கூற்று 3 : இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர்

 

(A)  கூற்று 1, 2, 3 சரி

(B) கூற்று 1 மட்டும் சரி .2, 3 தவறு

(C) கூற்று 1, 2 சரி, 3 மட்டும் தவறு

(D) கூற்று 1,3 சரி, 2 மட்டும் தவறு

 

49. கலைச்சொல் தருக - Humanity

 

(A) கருணை

(B) மனிதநேயம்

(C) இறை உணர்வு

(D) ஈரப்பதம்

 

50. கலைச்சொற்களை அறிதல் - Tornado

 

(A) புயல்

(B) சூறாவளி

(C) பெருங்காற்று

(D) சுழல் காற்று

 

51. Saline Soil என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைக் கண்டறிக

 

(A) களர் நிலம்

(B) உவர் நிலம்

(C) செம்மண் நிலம்

(D) கரிசல் நிலம்

 

52. அகரவரிசைப்படுத்துக – (மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை. மௌனம், மொழிபெயர்ப்பு,)

 

(A) மனத்துயர், மாவிலை, மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு, மௌனம்

(B) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மௌனம், மொழிபெயர்ப்பு

(C) மொழிபெயர்ப்பு, மாவிலை, மௌனம், மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்

(D) மேடுபள்ளம், மனத்துயர், முந்நீர், மொழிபெயர்ப்பு, மாவிலை, மெளனம், மீமிசை

 

53. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க ( உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.)

 

(A) அச்சாணி, உழுவோர், உலகத்தார்க்கு, போற்றப்பட்டனர், எனப்

(B) அச்சாணி, உழுவோர், எனப், உலகத்தார்க்கு, போற்றப்பட்டனர்

(C) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், எனப், போற்றப்பட்டனர்

(D) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், போற்றப்பட்டனர், எனப்

 

54. வேர்ச் சொல்லைக் கொடுத்து தொழிற்பெயரை உருவாக்கல் - கொடு

 

(A) கொடுத்து

(B) கொடுக்கிறான்

(C) கொடுத்தல்

(D) கொடுத்த

 

55. வேர்ச் சொல்லுக்குரிய வினைமுற்றைக் கண்டுபிடி - போ

 

(A) போனான்

(B) போகிற

(C) போகின

(D) போகுவார்

 

56. ‘படி’ என்பதன் வினையாலணையும் பெயர்

 

(A) படித்தான்

(B) படித்த

(C) படித்தவர்

(D) படித்தல்

 

57. சென்றனர் – வேர்ச்சொல்லைத் தருக.

 

(A) சென்றான்

(B) சென்ற

(C) சென்று

(D) செல்

 

58. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க - ‘மகிழ்வித்தனன்’

 

(A) மகிழ்ச்சி

(B) மகிழ்

(C) மகிழ்வி

(D) மகிள்

 

59. நடப்பாள் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக

 

(A) நடந்த

(B) நட

(C) நடந்து

(D) நடந்தன

 

60. ‘மலை’ எனும் பொருள் தரும் சொற்களைத் தேர்க

 

(A) பொருப்பு, வெற்பு, அசலம்

(B) வெற்பு, வேங்கடம், அசலம்

(C) மறை, வேதம், துறை

(D) குன்றம், கிரி, மறை

Previous Post Next Post