- அத்தி பூத்தாற் போல - அறிய செயல்
- அடியற்ற மரம் போல - விழுதல்
- ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை
- எலியும் பூனையும் போல - பகைமை
- வேம்பும் அரசும் போல, அச்சில் வார்த்தார் போல - ஒற்றுமை
- ஞாயிறு கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
- நீர்மேல் எழுத்துப் போல - நிலையற்றது
- கயிரற்ற பட்டம் போல - தவித்தல்
- கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது - பிறரை ஏமாற்றுதல்
- சூரியனைக் கண்ட பனி போல் - விலகல்
- செவிடன் காதில் சங்கு ஊதியது போல, மன்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல - பயனில்லை
- சேற்றில் முளைத்த செந்தாமரை போல - மேன்மை
- திருடனைத் தேள் கொட்டியது போல - சொல்ல முடியாத வேதனை
- தெரு நாய் போல - அலைச்சல்
- தோன்றி மறையும் வானவில் போல - நிலையாமை
- பசுந்தோல் போர்த்திய புலி, வேலியே பயிரை மேய்ந்தது போல - நயவஞ்சகம்
- பசுவை பிரிந்த கன்று போல - பிரிவு
- பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல - இயல்பு
- புயலின் சீக்கிய கலம் போல - தவிப்பு
- பகலவனைக் கண்ட பனிப்போல - விலகுதல்
- புற்றீசல் போல - பெருக்கம் அடைவது
- பூவோடு சேர்ந்த நாரும் - மணக்கும்
- மழை காணாப் பயிர் போல - வாடுதல்
- மதம் கொண்ட யானை போல - வீரம்
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல - இயலாமை
- வலையில் அகப்பட்ட மான் போல - துன்பம்
- வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல - மென்மை
- விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல - ஆபத்தை உணராமல்
- விழலுக்கு இறைத்த நீர் போல - வீணாதல்
- வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல - வருத்தம்
Tags:
TNPSC பொது தமிழ்