புதுக்கவிதை வினா விடைகள்

  1. முதல் கட்டுப்பாடற்ற கவிதை எது? புல்லின் இதழ்கள்
  2. புல்லின் இதழ்கள் யாரால் இயற்றப்பட்டது? வால்ட்விட்மன்
  3. முதன்முதலில் கட்டற்ற கவிதை எங்கு எழுதப்பட்டது? அமெரிக்கா
  4. கட்டற்ற கவிதை எவ்வாறு எழுதப்பட்டது? யாப்பிலிருந்து விடுபட்டது என்னும் பொருளில் [Free verse]
  5. இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் கட்டற்ற கவிதை நூல் யாது? பாழ் நிலம் [Waste Lan]
  6. பாழ் நிலத்தின் ஆசிரியர் யார்? டி. எஸ். எலியட்
  7. பாழ் நிலம் பெற்ற பரிசு யாது? நோபல் பரிசு
  8. தமிழில் முதன் முதலில் இயற்றப்பட்ட கட்டற்ற கவிதையை எழுதியது யார்? மகாகவி பாரதியார்
  9. பாரதியார் யாரால் தாக்கம் பெற்று கட்டற்ற கவிதை எழுதினார்? வால்ட் விட்மன்
  10. முதன் முதலில் சோதனை முயற்சியாக புதுக்கவிதை எழுதியவர் யார்? ந. பிச்சமூர்த்தி
  11. ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதை எழுதிய ஆண்டு யாது? 1934
  12. மணிக்கொடி காலம் என்பது யாது? 1930 - 1945
  13. மணிக்கொடி கவிஞர்கள் யாவர்? ந. பிச்சமூர்த்தி, தூரன், ரகுநாதன், கா. சுப்பிரமணியன்
  14. மணிக்கொடி காலத்தில் கவிதை வெளியிட்ட இதழ்கள் யாவை? கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜிமலர்
  15. எழுத்து காலம் யாது? 1945 - 1970
  16. எழுத்துக் கவிஞர்கள் யாவர்? தருமு சிவராம், பசுவையா, ஞானக்கூத்தன், சி.சு. செல்லப்பா, வைத்தீஸ்வரன், சி. மணி
  17. எழுத்து இதழைத் தொடங்கியவர் யார்? சி.சு. செல்லப்பா
  18. எழுத்துக்காலத்தில் கவிதை வெளியிட்ட இதழ்கள் யாவை? சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற
  19. வானம்பாடிக் காலம் யாது? 1970 - 1980
  20. வானம்பாடி இதழில் இயற்றிய கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், மீரா, மேத்தா, அபி, தமிழன்பன், புவியரசு, கங்கைகொண்டான், சக்திக் கனல்
  21. வர்க்கப்போராட்ட இயக்கக் கவிஞர்கள் யாவர்? இன்குலாப், வெண்மணி, செம்மலர்ச் செல்வன், நவபாரதி, தமிழ் நாடன், கந்தர்வன், அக்னிபுத்திரன்
  22. புதுக்கவிதையின் தந்தை யார்? ந. பிச்சமூர்த்தி
  23. தமிழின் முதல் கவிதை யாது? காதல்
  24. தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு யாது? புதுக்குரல்
  25. ந. பிச்சமூர்த்தி யாவருடைய தாக்கத்தால் கவிதை இயற்றினார்? வால்ட் விட்மன், தாகூர், பாரதி
  26. ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதை நூல்கள் யாவை? புதுக்குரல்கள் [1962], பிச்சமூர்த்திக் கவிதைகள், கிளிக்குஞ்சு, காட்டுவாத்து, கிளிக்கூண்டு, பூக்காரி, வழித்துணை
  27. கவிக்கோ அப்துல் ரகுமான் எங்கு பிறந்தார்? மதுரை
  28. அப்துல் ரகுமான் எப்போது பிறந்தார்? 1937
  29. அப்துல் ரகுமான் 1999 ஆம் ஆண்டு எந்த கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கினார்? ஆலாபனை
  30. அப்துல் ரகுமான் நடத்திய இதழ் யாது? கவிக்கோ
  31. கவிக்கோ பெற்ற விருதுகள் யாவை? தம்ழன்னை விருது, அட்சரா, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, முரசொலி அறக்கட்டளை விருது
  32. அப்துல் ரகுமான் பெற்ற சிறப்புப் பெயர்கள் யாவை? வின்மீன்களிடையே ஒரு முழுமதி, வானத்தை வென்ற கவிஞன், சூரியக் கவிஞன், தமிழ்நாட்டு இக்பால்
  33. கவிஞர் மீரா எங்கு பிறந்தார்? சிவகங்கை
  34. கவிஞர் மீரா எப்போது பிறந்தார்? 1938
  35. கவிஞர் மீராவின் பெற்றோர் யாவர்? மீனாட்சி சுந்தரம், லட்சுமி அம்மாள்
  36. கவிஞர் மீராவின் இயற்பெயர் யாது? மீ. ராசேந்திரன்
  37. கவிஞர் மீராவின் புதுக்கவிதைத் தொகுப்புகள் யாவை? கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள், ஊசிகள்
  38. கவிஞர் மீராவின் மரபுக்கவிதைத் தொகுப்புகள் யாவை? இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும்
  39. மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி எழுதினார்? 'ஆகாசத்துக்கு அடுத்த வீடு'
  40. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் யாது? ஜெகதீசன்
  41. ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு பிறந்தார்? 1940
  42. ஈரோடு தமிழன்பன் எங்கு பிறந்தார்? ஈரோட்டிற்கு அருகில் உள்ள சென்னிமலை
  43. ஈரோடு தமிழன்பனின் பெற்றோர் யாவர்? நடராஜா, வள்ளியம்மாள்
  44. ஈரோடு தமிழன்பன் சாகித்திய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக விளங்கியுள்ளார்.
  45. ஈரோடு தமிழன்பனின் 'தமிழன்பனின் மரபுக்கவிதைகள்' என்ற மரபுக்கவிதை நூல் பெற்ற விருது யாது? தமிழக அரசின் பரிசு
  46. ஈரோடு தமிழன்பனின் நூல்கள் யாவை? தோணி வருகிறது, தீவுகள் கரையேறுகின்றன, சூரியப் பறவைகள், விடியல் விழுதுகள், நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், காலத்திற்கு ஒரு நாள் முந்து, சிலிர்ப்புகள் பொதுவுடைமைப் பூபாளம் என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
  47. நா. காமராசனின் கவிதைத் தொகுப்புகள் யாவை? கறுப்பு மலர்கள், மலையும் ஜீவநதிகளுயும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், பொம்மைப் பாடகி
  48. மு. மேத்தா எங்கு பிறந்தார்? பெரியகுளம்
  49. மு. மேத்தா பிறந்த ஆண்டு யாது? 1945
  50. மு. மேத்தாவின் தமிழக அரசின் விருது பெற்ற மரபுக் கவிதை நூல் யாது? ஊர்வலம்
  51. மு. மேத்தாவின் சாகித்ய அகாடமி விருது வென்ற நூல் யாது? ஆகாயத்திற்கு அடுத்த வீடு
  52. மு. மேத்தா சாகித்ய அகாடமி விருது வென்ற ஆண்டு எது? 2006
  53. மு. மேத்தாவின் படைப்புக்கள் யாவை? கண்ணீர் பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, முகத்துக்கு முகம், மனிதனைத் தேடி, திருவிழாவைல் ஒரு தெருப்பாடகன், காத்திருந்த காற்று
  54. மு. மேத்தாவின் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன? ஆங்கிலம், இந்தி, மலையாளம்
  55. இன்குலாப்பின் இயற்பெயர் யாது? ஷாகுல் அமீது
  56. இன்குலாப் பிறந்த இடம் எது? ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை
  57. இன்குலாப்பின் கவிதைத் தொகுப்புகள் யாவை? இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, கூக்குரல், சூரியனைச் சுமப்பவர்கள்
  58. சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு பிறந்தார்? பொள்ளாச்சி
  59. சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஆண்டு எது? 1946
  60. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர் யாது? நடராச பாலசுப்பிரமணியம் சேது ராமசாமி
  61. பாலசுப்பிரமணியத்தின் புனைப்பெயர் யாது? சிற்பி
  62. பாலசுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை? 4 மலையாள நூல்கள்
  63. சாகித்ய அகாடமி விருது வென்ற சிற்பி பாலசுப்பிரமணியத்தின் மொழிபெயர்ப்புப் படைப்பு யாது? அக்னிசாட்சி [2000]
  64. சாகித்ய அகாடமி விருது வென்ற சிற்பிபாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல் யாது? ஒரு கிராமத்து நதி [2002]
  65. இருமுறை சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ்க் கவிஞர் யார்? சிற்பிப் பாலசுப்பிரமணியம்
  66. பாலசுப்பிரமணியம் எந்த நூலுக்காக தமிழக அரசின் பரிசு வென்றார்? மௌன மயக்கங்கள் என்ற புதுக்கவிதை காப்பியம்
  67. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் படைப்புக்கள் யாவை? சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், நிலாப்பூ, சூரிய நிழல்
  68. சிற்பி பாலசுப்பிரமணியம் குழந்தைகளுக்காக இயற்றிய நூல் எது? வண்ணப் பூக்கள்
  69. கவிஞர் வைரமுத்து பிறந்த ஆண்டு? 1953
  70. வைரமுத்து பிறந்த ஊர் யாது? தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேட்டூர்
  71. வைரமுத்துவின் பெற்றோர் யாவர்? இராமசாமி, அங்கம்மா
  72. புதுக்கவிதையின் புதையல் எனப் புகழப்பட்ட வைரமுத்து படைப்பு யாது? திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  73. தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் எனப் பாராட்டப் பெற்ற வைரமுத்துவின் நூல் யாது? தண்ணீர் தேசம் [1996]
  74. வைரமுத்துவின் படைப்புக்கள் யாவை? இன்னொரு தேசிய கீதம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, கொஞ்சம் தேனீர் நிறைய வானம், மூன்றாம் உலகப் போர் [கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்]
Previous Post Next Post