ஏப்ரல் -19 ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்!


👉ஆரியபட்டா இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆகும்.

👉இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கை கோளுக்கு சூட்டினர்.

👉ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

👉இதன் எடை 360கிகி ஆகும்.

👉சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ஆம் தேதி ஏவப்பட்டது.

👉பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா.

👉எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.

👉செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

👉பிறகு 1979ஆம் ஆண்டு மீண்டும் ரஷ்யாவின் உதவியுடன் பாஸ்கரா என்ற செயற்கைக் கோளை அனுப்பியது.

👉அதன்பிறகு 1980-ல் இருந்து இந்தியா சுயமாக செயற்கைக் கோளை ஏவ ஆரம்பித்தது.
Previous Post Next Post