👉நாட்டின் வளர்ச்சியில் 'சிவில் சர்வீசஸ் ' எனும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
👉1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி டெல்லி 'மெட்கால்பே' இல்லத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், இந்திய குடிமைப் பணி அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) ஆற்றிய உரையை நினைவு கூர்ந்திடும் வகையில் 2006 ஏப்ரல் 21ல் தேசிய குடிமைப் பணிகள் தினம் கொண்டாடப்பட்டது.
👉சர்தார் வல்லபாய் படேல் தான் குடிமைப் பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
👉மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
👉நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ்.,(நிர்வாகம்), ஐ.பி.எஸ்.,(காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 21-ம் தேதி தேசிய குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
👉இன்றைய நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அரசு அதிகாரிகளுக்கு, சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
Tags:
IMPORTANT DAYS