21.
பொருந்தாத இணையைத் தெரிவு செய்க
(A)
பாசவர் - நெய்பவர்
(B)
ஓசுநர் - எண்ணெய் விற்பவர்
(C)
கண்ணுள் வினைஞர் - ஓவியர்
(D)
மண்ணீட்டாளர் - சிற்பி
22.
கூற்றுகளை ஆராய்க
கூற்று
1: கம்பர் பிறந்த தேரழுந்தூர் சோழநாட்டில் அமைந்துள்ளது.
கூற்று
2 : கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தப் புலவர்.
(A)
கூற்று 1 மட்டும் சரி
(B)
கூற்று 2 மட்டும் சரி
(C)
கூற்று இரண்டும் சரி
(D)
கூற்று இரண்டும் தவறு
23.
கூலவாணிகம் செய்தவர்
(A)
பரணர்
(B)
இளங்கோவடிகள்
(C)
கம்பர்
(D)
சீத்தலைச்சாத்தனார்
24.
அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன?
(A)
2,8,12,18, 22… (இரண்டு, எட்டாக)
(B)
6, 16,26,36, 46… (ஆறு,ஆறாக)
(C)
1, 3, 5, 7, 9… (ஒற்றைப்படை
எண்களாக)
(D)
4, 14,24,34, 44… (நான்கு, நான்காக)
25.
‘அறுவர்க் கிளைய நங்கை’ இறைவனை ஆடல் கண்டருளிய நங்கை எனப்படுபவள் யார்?
(A)
மாரியம்மன்
(B)
துர்க்கை
(C)
திருமகள்
(D)
பிடாரி
26.
கீழ்கண்ட நூல்களுள் எட்டுத்தொகை நூல்
(A)
நான்மணிக்கடிகை
(B)
இன்னாநாற்பது
(C)
கலித்தொகை
(D)
நாலடியார்
27.
‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் தொடரில் ‘நால்’ என்பது எந்த நூலைக் குறிக்கிறது?
(A)
நான்மணிக்கடிகை
(B)
நாலடியார்
(C)
களவழி நாற்பது
(D)
கார் நாற்பது
28.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதியை வலியுறுத்தும் நூல்களின் எண்ணிக்கை
(A)
11
(B)
10
(C)
6
(D)
9
29.
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
(A)
70
(B)
38
(C)
25
(D)
36
30.
கீழ்க்கண்ட பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களைக் கண்டறிக.
“மனிதரெலாம்
அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம்
வானைப்போல் விரிவ டைந்து”…
(A)
மனிதரெலாம், மனோபாவம்
(B)
வானைப்போல் விரிவடைந்து
(C)
மனிதரெலாம், அன்புநெறி
(D)
மனோபாவம் வானைப்போல்
31.
வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான் - இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள்
யாது?’
(A)
மெய்யழுகை – உண்மையான அழுகை
(B)
எண்ணித் துணியாதார் – நல்லவன் வடிக்கும் கண்ணீர்
(C)
பொய்யழுகை, பொய்யான
நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்
(D)
பொய்யில்லாத அழுகை
32.
உவமைக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க - “உடலும் உயிரும் போல”
(A)
ஒற்றுமையின்மை
(B)
மகிழ்ச்சி
(C)
வெளிப்படைத்தன்மை
(D)
ஒற்றுமை
33.
பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.
(A)
நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார்
(B)
நிலவன் புத்தகத்தைப் படித்தார்
(C)
நிலவன் பாடம் நடத்தினார்
(D)
நிலவன் சிறந்த பள்ளியில்
படிப்பித்தார்
34.
விடைக்கேற்ற வினா எது? - கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
(A)
கரகாட்டம் என்றால் என்ன?
(B)
கரகாட்டத்தின் வேறு
பெயர்கள் யாவை?
(C)
கரகாட்டம் எப்போது நடைபெறும்?
(D)
கரகாட்டத்தினைப் போன்ற வேறு கலைகள் யாவை?
35.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
(A)
திசைச் சொற்கள்
(B)
வட சொற்கள்
(C)
உரிச்சொற்கள்
(D)
தொகைச் சொற்கள்
36.
கீழ்க்கண்டவற்றுள் வினையெச்சம் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
(A)
வெந்து
(B)
மூடுபனி
(C)
வெம்பி
(D)
எய்தி
37.
நாற்காலி என்பது எவ்வகைப் பெயர் என கண்டறிக.
(A)
பொருட் பெயர்
(B)
சினைப் பெயர்
(C)
காலப் பெயர்
(D)
பண்புப் பெயர்
38.
‘வா’ என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
(A)
வந்தவர்
(B)
வந்து
(C)
வந்த
(D)
வந்தான்
39.
‘ஓடு’ – என்ற வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை கண்டறிந்து எழுதுக.
(A)
ஓடுக
(B)
ஓடுதல்
(C)
ஓடிய
(D)
ஒடிந்து
40.
“நொந்தான்” சொல்லின் வேர்ச்சொல் யாது?
(A)
நொ
(B)
நொந்த
(C)
நொந்து
(D)
நோதல்