டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பயிற்சி 505 காலியிடங்கள்




பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Engineering Graduate Apprentice

காலியிடங்கள்: 197

உதவித் தொகை: மாதம் ரூ.15,028

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், கெமிக்கல், மைனிங்க், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பார்மஸி துறையில் பி.பார்ம் முடித்தவர்களும் விண்ணப்பிக்காலம்.

பயிற்சி: Non-Engineering Graduate Apprentice

காலியிடங்கள்: 155

உதவித்தொகை: மாதம் ரூ.12,524

தகுதி: வணிகவியல், கணினி அறிவியல், கணினி அப்ளிகேசன், பிபிஏ, ஜியாலஜி, கெமிக்கல், மைக்ரோ பயாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி: Diploma Apprentice

காலியிடங்கள்: 153

உதவித்தொகை: மாதம் ரூ. 12,524

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், மைனிங்க், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெடிக்கல் லேப் டெக்னாலஜி(எம்எல்டி), எக்ஸ்-ரே டெக்னீசியன், டெக்னீசியன் எக்ஸ்-ரே, கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் உணவக மேலாண்மை ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager, Land Department, NLC India Ltd, Neyveli - 607 003
Previous Post Next Post