தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் நகை கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக வீட்டு கடன் வழங்கும் வசதியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கூட்டுறவு என்ற செயலியை நேற்று அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த செயலி மூலம் வீட்டு கடன் வாங்குபவருக்கு ரூ 75 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்த செயலி மூலமாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் 8.5 சதவீத வட்டியில் கடன் கிடைக்கும். இந்த கடனை அடைப்பதற்கு 20 வருடங்கள் கால அவகாசமானது கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த கூட்டுறவு செயலி மூலம் வீட்டு கடன் வழங்கும் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
பொதுச் செய்திகள்