உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் ரூபாய் 75 மதிப்பிலான நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
நம் நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அதிகாரம் பெற்றதாக உச்சநீதிமன்றம் உள்ளது. இ இந்த உச்சநீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முதலில் இந்த உச்சநீதிமன்றம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தான் செயல்பட்டு வந்தது.
பழைய நாடாளுமன்ற கட்டத்தில் 8 ஆண்டுகள் வரை உச்சநீதிமன்றம் செயல்பட்டது. அதன்பிறகு தான் தற்போதைய இடத்துக்கு உச்சநீதிமன்றம் மாறுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் 75 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து அனைத்து மாநிங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் பங்கேற்கும் வகையில் 2 நாள் தேசிய மாநாடு என்பது டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையிலான ரூ.75 மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், பிற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி பாராட்டினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், ''உச்சநீதிமன்றத்தின் 70 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண நிறுவனத்தின் பயணம் அல்ல. இந்தியா முதிர்ச்சியடைந்துள்ளது என்பதை குறிக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்திய நீதித்துறையின் மீது மக்களுக்கு ஒருபோதும் நம்பிக்கையின்மை, சந்தேகம் வந்தது இல்லை.
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருப்பதற்கு உச்சநீதிமன்றம் முக்கிய காரணமாகும். எமர்ஜென்சி எனும் இருண்ட காலத்தில் கூட மக்களின் அடிப்படை உரிமைகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது'' என பெருமையாக பேசினார்.
Tags:
பொதுச் செய்திகள்