தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 861 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்புக் கண்காணிப்பாளர், கணக் கெடுப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வலுநர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள்ளதாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐ.டி.ஐ, டிப்ளமோ (மூன்றாண்டு)
வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.
விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைன் மூலமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-09-2024
தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 09-11-2024
மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை
மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்: https://www.tnpsc.gov.in/Document/english/CTSE_DIP_Eng_13.08.2024_.pdf
Tags:
வேலைவாய்ப்பு