ஆரோக்கியமான உலர் பழங்களில் (ட்ரை ப்ரூட்ஸ்களில்) பாதாம் ஒன்றாகும். கிட்டத்தட்ட அனைவரும் வாங்க கூடிய விலைகளில் கிடைக்கும் பாதாம்களை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
தினமும் காலையிலும், நம் தாய்மார்கள் கைநிறைய பாதாம் பருப்பைக் கொடுத்து தனது பிள்ளைகளை சாப்பிட வைப்பார்கள், ஏனெனில் அவை நம் மூளையின் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரிக்கின்றன.
இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், மினெரல்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.
மேலும், இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் இருந்து சருமத்திற்கு பளபளப்பைக் கொடுப்பது வரை எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், பாதாம் சாப்பிடுவதற்கான சிறந்த வழி குறித்து நாம் அடிக்கடி குழப்பம் அடைகிறோம். தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது ஊறவைத்து தோலை உரித்து சாப்பிட வேண்டுமா? இது குறித்து விரிவாக பார்ப்போம்.

தோலுடன் கூடிய பாதாமின் நன்மைகள்:
தோலுடன் கூடிய பாதாமில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே தோலுடன் பாதம் பருப்பை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குகிறது.
பாதாம் தோல்களில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிபினால்கள் உங்கள் செல்களைப் பாதுகாத்து, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது உடலில் உள்ள ஆக்ஸிடேடிவ் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
இதில் உள்ள ஃபைபர், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும், நீடித்த ஆற்றலுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.
தோலுடன் கூடிய பாதாம் உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை ஆதரிக்கிறது.
தோல் இல்லாத பாதாம் நன்மைகள்:
தோல் இல்லாத பாதாம் வயிற்றில் மென்மையாகவும், ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும். தோலில் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
ஊறவைத்த மற்றும் தோலுரித்த பாதாம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
ஊறவைத்த மற்றும் தோலுரிக்கப்பட்ட பாதாம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும் ஏற்றது, இதனால் இதய நோய்களைத் தடுக்கிறது மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
முடிவுரை:
பாதம் சாப்பிடுவது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தேர்வு மற்றும் உணவுத் தேவைகளைப் பற்றியது. தோலுரிக்காத பாதாம் பருப்பை நீங்கள் தேர்வு செய்தாலும் சரி, அல்லது தோலுரித்த பாதாம் பருப்பை நீங்கள் தேர்வு செய்தாலும் சரி, இவை இரண்டும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உங்கள் சிற்றுண்டி பசியைப் பூர்த்தி செய்யவும் உதவுகிறது.
Tags:
உடல் நலம்