பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்பு திட்டம்) என்ற சேமிப்பு திட்டத்தில் சில விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஆகும். இந்த சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தை பிறந்தவுடனேயே இணைந்து மாதாமாதம் பணம் செலுத்தி வரலாம்.
இந்த திட்டத்தில் வெறும் ரூ 250 முதல் ரூ 1.5 லட்சம் வரை டெபாசிட்ட செய்யலாம். இந்த திட்டத்தில் இணைய பெண் குழந்தைகள் 10 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தி வந்தால் 21 ஆண்டுகள் கழித்து வட்டி அசல் என சேர்த்து ரூ 5.9 லட்சம் கிடைக்கும். ஆண்டுக்கு 12000*21= 2,52,000 செலுத்தினால் 3.38 லட்சம் லாபம் கிடைக்கும்.
இது கூட்டு வட்டியாக (Compund Interest) கணக்கிடப்படுகிறது. இந்த பணத்தை குழந்தைகளின் கல்வி செலவிற்காகவும் திருமண செலவிற்காகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் ஒரு சிறிய தவறு செய்துவிட்டால் கூட கணக்கே முடக்கப்படும் நிலை உள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த கணக்கை தொடங்க பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கேஒய்சி ஆவணங்கள் (அடையாளம் மற்றும் முகவரிச் சான்று) ஆகிய ஆவணங்கள் தேவை.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ஒரு நிதியாண்டிற்கு ரூ 250 மற்றும் அதிகபட்சத் தொகை ரூ 1,50,000 ஆகும். கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தை 18 வயதை அடையும் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படாது. அந்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானால் கல்விச் செலவுகள், அல்லது திருமணச் செலவுகளைச் சமாளிக்க கணக்கு இருப்பில் 50 சதவீதம் எடுத்துக் கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்கிய பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணக்கு துவங்கிய பின், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 150 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்யத் தவறினால், கணக்கு மூடப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் 31க்குள் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும்.
பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் இந்த கணக்கு தொடங்கலாம். இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க முடியும். ஒரு வேளை தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், இரண்டாவது பிரசவமாகவோ அல்லது முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலோ, மூன்றாவது பெண் குழந்தையின் பெயரில் மூன்றாவது கணக்கைத் தொடங்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை போல், ஆண் குழந்தைகளுக்கும் செல்வமகன் சேமிப்பு திட்டம் என்ற ஒன்று உள்ளது. இதை ஆங்கிலத்தில் பிபிஎஃப் என்பார்கள். இந்த திட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு பணத்தை சேமித்து அவர்களின் படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tags:
பொதுச் செய்திகள்